பக்கம்:திருவருட் பயன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



7

‘தேசுமிகும் அருட் பயின்ற சிவப்பிரகாசத்தில்

திருந்து பொதுச் சங்கற்ப நிராகரனந் திருத்தி

ஆசிலருள் வினவெண்பாச் சார்பு நூலால்

அருள் எளிதிற் குறிகூட அளித்து ஞானப்

பூசைதக்க காரணமுன் புகன்றதனிற் புரிந்து

புணர்விக்கச் சிவஞான போதசித்தி வழிநூல்

மாசில் சதமணிக் கோவை. முன்னூல் சான்று

மருவு திருமுறைத் திரட்டு வைத்தனன் மன்னுயிர்க்கே’

எனவரும் ஞானதீக்கைத் திருவிருத்தத்தால் நன்கு புலனாகும். எனவே உலகப்பொதுமறையாகிய திருக்குறளை அடியொற்றிச் சிவநெறிச் செல்வர்கள் அருளிய திருமுறைகளில் அமைந்த திருவருள் உண்மைகளைச் சிறப்புமுறையில் எடுத்துரைக்கு முகமாகத் திருவருட்பயன் என்னும் இந்நூல் இயற்றப்பெற்றதெனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

திருக்குறளைப் பின்பற்றிக் குறள்வெண்பா யாப்பில் பிற் காலத்தில் தோன்றிய நூல் ஒளவையார் குறள் என்பதாகும். இந்நூல், வீட்டுநெறிப்பால், திருவருட்பால், தன்பால் என முப்பாலாய், முப்பத்தொரு அதிகாரங்களையுடையதாய், ஒவ்வோரதிகாரமும் பத்துக் குறட்பாக்களால் இயன்று முந்நூற்றுப்பத்துக் குறட்பாக்களையுடையதாகும். சிவப்பிரகாசம் 80-ஆம் செய்யுளுரையில் இந்நூலிலுள்ள

‘' நல்லன நூல்பல கற்கினுங் காண்பரிதே

எல்லை யிலாத சிவம் ” (ஒளவை குறள்-206)

என்ற குறள்வெண்பாவை ஒளவையார் வாக்காக மதுரைச் சிவப்பிரகாசர் எடுத்துக்காட்டியுள்ளார். அவர் குறித்த ஒளவையார் குறளின் வேறாக அவர்காலத்தில் 'வீட்டுநெறிப் பால்' என்ற பெயருடன் மற்றெரு நூலும் வழங்கியதென்பது, சிவப்பிரகாசம் 25-ஆம் செய்யுளுரையில், வீட்டுநெறிப்பாலினும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/9&oldid=513081" இலிருந்து மீள்விக்கப்பட்டது