பக்கம்:திருவருட் பயன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



68

போலத் திருவருளின் மிக்கதாகிய பொருள். உலகத்தில்லை என்க.

இதனால் அருளது உயர்வு கூறப்பட்டது.

விளக்கம் : உயிர்க்குயிராய் நின்று உலகினை இயக்கி யருளும் இறைவனோடு பிரிப்பின்றி நிற்கும் அருளின் பெருமையினை விளக்குவது, அருளதுநிலை என்னும் இவ்வதிகார மாகும். அருள் என்பது, தொடர்பு பற்றாது எல்லாவுயிர்கள் மேலும் செல்வதாகிய கருணையாகும். அன்பு அருள் என்னும் இப்பண்புகள் உயிர்களுக்குரிய குணமெனப் பொதுவாகப் பேசப்பட்டாலும், வேண்டுதல் வேண்டாமையின்றி எல்லா உயிர்கள்மேலும் செல்வதாகிய கருணை, அறவாழியந்தண ஆகிய இறைவனொருவனுக்கேயுரிய சிறப்பியல்பென்பதும், இவ்வியல்பு இறைவனே விட்டுப் பிரிக்கவொண்ணாத இயற்கைப் பண்பென்பதும், தன்னிற் பிரிவிலா இவ்வருட் பண்பினேயே இறைவனுக்குச் சத்தியெனச் சான்றேர் உருவகஞ் செய்து போற்றியுள்ளார்கள் என்பதும் சைவத் திருமுறைகளிலும் அத்திருமுறைகளின் பயனாக விளங்கும் மெய்கண்ட நூல்களிலும் நன்கு புலப்படுத்தப் பெற்றுள்ளன.

    "அருளே யுலகெலாம் ஆள்விப்ப தீசன்
     அருளே பிறப்பறுப்ப தானல்-அருளாலே
     மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன்
                                             எஞ்ஞான்றும் 
     எப்பொருளும் ஆவ தெனக்கு" (அற்புதத்திருவந்தாதி 9.)

எனக் காரைக்காலம்மையாரும்

    "அருளது சத்தியாகும் அரன்தனக் கருளையின்றித்
     தெருள் சிவமில்லை அந்தச் சிவமின்றிச் சத்தியில்லை"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/91&oldid=515390" இலிருந்து மீள்விக்கப்பட்டது