பக்கம்:திருவருட் பயன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



70

ராய்ப் பிறப்பினை யஞ்சி வீடுபேற்றின் பொருட்டுத் துறந் தார்க்கு இன்றியமையாத பண்புகளுள் அருளுடைமையினை முதற்கண் வைத்தோதினார். தெய்வப் புலவரால் எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணராகிய துறவிகள் மேல்வைத்துப் பொதுவகையால் உணர்த்தப்பட்ட அருள் என்பது, அவ் அந்தணராகிய அறவோரால் வணங்கப்பெறும் அறவாழி யந்தண்னாகிய இறைவனுடன் பிரிப்பின்றி விளங்கும் சத்தியே என்னும் உண்மையைச் சிறப்புவகையால் அறிவுறுத்த எண்ணிய உமாபதி சிவாசாரியார். திருக்குறளிலமைந்த அருளுடைமை என்னும் அதிகாரத்தை யடியொற்றி அருளது நிலை என்னும் இவ்வதிகாரத்தை அமைத்துள்ளார். இந் நுட்பம், இவ்விரண்டு அதிகாரங்களையும் ஒப்பு நோக்கிப் பயில்வார்க்கு இனிது விளங்கும்.

அருளது நிலை என்னும் இவ்வதிகாரத்தின் முதற் குறள், மக்கள் பெறுதற்குரிய செல்வங்களுள் அருளின்மிக்கது வேறொன்றுமில்லை என அறிவுறுத்துகின்றது.

"வேண்டும் பொருளின் தலையிலதுபோல், அருளின் பெரியது அகிலத்து இல்" என நிரம்ப வழகிய தேசிகரும், அகிலத்து வேண்டும் பொருளின் தலையிலதுபோல், அருளின் பெரியது இல்’ எனச் சிந்தனையுரையாசிரியரும் இக்குறள் வெண்பாவை இயைத்துப் பொருள் உரைப்பர். இவ்விருவரும் 'அகிலத்தில்’ என்றே பாடங்கொண்டு பொருள் வரைந்திருத்தலால் அதுவே இங்கு மூல பாடமாகக் கொள்ளப்பெற்றது.

'அகிலம்’ என்பது உலகெலாம் என்னும் பொருளுடைய வடசொல். தலையாயதனைத் தலை எனக்குறித்தார். தலையாயது-மேலானது. இம்மை யின்பத்திற்கு ஏதுவாக மக்களால் விரும்பப்படும் பொருட்செல்வத்திற்குமேலாகச் சிறப்புடைய தொன்று இவ்வுலகில் இல்லாதவாறு போல, வீடுபேற்றின் பத்திற்குத் துணையாகிய அருட் செல்வத்தினும் மேலான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/93&oldid=515392" இலிருந்து மீள்விக்கப்பட்டது