பக்கம்:திருவருட் பயன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



71

தொரு பொருள் எவ்வுலகத்தும் இல்லை என்பதாம். இவ்வுலக இன்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல, இம்மை மறுமை அம்மையாகிய மும்மையின்பங்கட்கும் அருளே காரணம் என்றாயிற்று. எனவே செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலைசிறந்த செல்வம் அருளால் வரும் செல்வமே என்பதும் உடன் உணர்த்தியவாறு. இக்குறள்,

     "அருட்செல்வம் செல்வத்துட் செல்வம், பொருட்செல்வம்
      பூரியார் கண்ணும் உள"                           (241)

எனவும்,

     "அருளில்லார்க் கவ்வுலக மில்லை, பொருளில்லார்க்
      கிவ்வுலகம் இல்லாகி யாங்கு?                     (247)

எனவும் வரும் திருக்குறள்களின் சொற்பொருள்களை அவ்வாறே அடியொற்றியமைந்திருத்தல் காண்க.

மேற்குறித்த திருவருள் உயிர்கட்குச் செய்யும் உதவி யாது? என வினவிய மாணக்கருக்கு அத்திருவருள் செய்யும் பேருதவியினை விரித்துரைப்பதாக அமைந்தது அடுத்துவரும் குறள்வெண்பாவாகும்.

    32. பெருக்க நுகர வினை பேரொளியாய் எங்கும்
        அருக்கனென நிற்கும் அருள்.

இ-ள்: உலகத்து மக்கட் டொகுதிகள் பொருளினை யீட்டவும் துய்க்கவும் நிமித்தமாய் நின்ற சூரியனைப்போல அருளும், உயிர்களெல்லாம் புண்ணிய பாவங்களை வளர்க்கவும் அவற்றின் பயனாகிய சுக துக்கங்களை அருத்தவும் காரணமாய் மிகுந்த ஒளியாகி எவ்விடத்தும் நிறைத்து கிற்கும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/94&oldid=515394" இலிருந்து மீள்விக்கப்பட்டது