பக்கம்:திருவருட் பயன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



76

வுயிர்களைத் தொடர்ந்து வரும் மருளானும் மாணாப்பிறப்பே காரணமென்பதும்,

      "கடலினுள் நாய் நக்கியாங்குன் கருணைக்கடலினுள்ளம்
       விடலரியேனை"              (நீத்தல் விண்ணப்பம்-13)

எனவும்,

      "வெள்ளத்துள் நாவற்றியாங்குன் அருள் பெற்றுத் துன்
       விள்ளக்கிலேனை"                         (ஷை 14) 

(பத்தினின்றும்எனவும் வரும் திருவாசகத் தொடர்களால் இனிது புலனாம்.)

ஆன்மாக்கள், திருவருள் இடமாகக் காரியப்பட்டும் தாம் அத்திருவருளை அறியாதிருத்தல் எவ்வாறு? என வினவிய மாணாக்கர்க்கு உவம அளவையால் எடுத்துக்காட்டுத் தந்து அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பா வாகும்.

   35. அணுகு துணையறியா வாற்றோனி லைந்தும்
       உணர்வை யுணரா வுயிர்.

இ-ள்: தமக்கு மருங்காக உடன் வருந் துணையினைத் துணையென நாடாது வழிச்செல்வான் போலவும், தமக்கு முதலாய் நின்று உணர்த்தத்தன்மையறியாத இந்திரியங்கள் போலவும், உயிர்கள் தாமும் தமக்குயிராய் நின்றுணர்த்தும் அருளினே அறியமாட்ட என்க.

இவை துணைமையும் தலைமையும்பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை.

விளக்கம் : ஆன்மாவின் துணைகொண்டு அறியுந்தன்மை யவாகிய இந்திரியங்கள் ஐந்தும், தாம் ஆன்மாவினாற் காரியப்படுதலை அறியாதவாறுபோல, உயிர்க்குயிராகிய முதல்வன் துணைகொண்டு அறியுந்தன்மையவாகிய ஆன்மாக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/99&oldid=515400" இலிருந்து மீள்விக்கப்பட்டது