பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ5உ கர். திருவருனேக் கலம்பகம்

மலகரி குறிஞ்சி தேசி பைரவி சுரும்பு பாடும்

வயலருணை மங்கை பாகாே பல மலர் கதம்ப துாளி மிருகமத சுகந்தம் விசு

பரிமள வசங்க ராசரே. அதிர் அள் மலகரி குறிஞ்சி தேசி பைரவி சுரும்பு பாடும் - மலகரி குறிஞ்சி தேசி பைரவி ஆகிய பண்களை வண்டுகள் பாடுகின்ற, வயல் அருணை - வயல்கள் சூழ்ந்த அருணகிரிப் பதியிலுள்ள, மங்கை பாகரே - உமாதேவியை இடப் பாகத்திலுடையவரே, பல மலர் - பல மலர்களும், கதம்பம் தாளி - பல வாசனைப் பொடியும், மிருகமதம் - கத்தாரியும், சுகந்தம் வீசு - நல்ல வாசனை வீசுகின்ற, பரிமள வசந்தராசரே- , இலகு ஒளி பரந்து - விளங்குகின்ற ஒளியைப் பாவச்செய்து, மாரன்விடு கனை துரந்து - மன்மதன் விடுகின்ற பானங்களை நீக்கி, நாடி யிடும் இரு நெடுகண் மாதாார் - உம்மையே கருதுகின்ற இரண்டு நீண்ட கண்களையுடைய தலைவியாது, விலகரிய கொங்கை மீது - நெருங்கிய தனங்களின்மேல், பழம் நழுவி வந்து பாலின் விழு வது என - வாழைப்பழம் நழுவிவந்து பாலில் விழுவதுபோல, வந்துசேர்கிலீர் - வந்து அடையாமலிருக்கின்றீர்.

இது, தோழி தலைவியை யனையும்படி தலைவனை வேண்டல். பரந்து, துரந்து பிறவினையாக்குக. துரந்து - செலுத்தி; நீக்கி. விலகு அரிய - இடையீடில்லாத , நெருங்கிய. பழம் நழுவிப் பாலில் விழுவது போல’ என்பது பழமொழி. இது, இலேசாகச் சேர்வக குறித்துக் கூறியதென்க. மங்கை பாகரே என்று விளித்தது நீர் மங்கைபாகராதலால் சேர்கிலீரென்ற குறிப்பு. கதம்பம் - கலப்பு. தாளி - பொடி. சுகந்தம் - நல்ல சந்தனமுமாம். பரிமள வசந்தராசர் என்றும் வசந்த சாயர் என் றும் இந் நூலிற் பல கவிகளிலும் அருணகிரிகாகாது திருப் பெயர் வருதல் காண்க. பாகாே, ராசரே - விளி.