பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சிசு- திருவருணேக் கலம்பகம்

வீடு நாடலுறுவார்க்கு மறைப்புச்சத்தி அருட்சத்தியி லொடுங்கி அருட்சத்தியே மேற்பட்டுத் தோன்றும். அதனை நகரம் வக ாத்தி லொடுங்குவதென்ப. சிவத்தில் சத்தி ஒடுங்குதலால் சிக ாத்தில் வகரம் ஒடுங்குவதாகும். உயிர் அருட்சத்தியின் துணை கொண்டு சிவத்தில் ஒடுங்குவதால் யகாமும் சிகரத்தி லொடுங்கு மென்ப. உயிரைப்பற்றிய மலம் வலியற் றடங்குவதால் மகா மும் யகரத்திலொடுங்கும். இம்முறையாக, ஐந்தெழுத்தும் சிக ாத்தி லொடுங்குமென்ப.

ஆகமம் - சிவபெருமானல் அருளிச் செய்யப் பட்டமையின் சிவாகமம் என்ருர். ஆகமம் - ஆ - ஞானம், க - மோகூம், ம-மலகாசம்; எனவே, ஆன்மாக்களுக்கு மலத்தை நாசம் பண்ணி ஞானத்தை யுதிப்பித்து மோகூ த்தைக் கொடுக்க வல்லது; ஆ - பாசம், க - பசு, ம - பதி, எனவே, திரிபதார்த்த ல கூடினத்தை யுணர்த்தவல்லது என்ப. சைவாக மங்கள் காமிக முதலிய உஅ-ம் ஆம். காமிக முதலிய கo-ம் பிாணவர் முதலிய கo சிவன் களுக்கும் அருளிச் செய்யப்பட்டமையின் சிவபேதமென்றும்; விசய முதலிய க அ-ம் அநாதிருத்திரர் முதலிய க.அ. உருத்திரர் களுக்கும் அருளிச்செய்யப்பட்டமையின் ருத்திரபேதமென்றுஞ் சொல்லப்படும். காமிக முதலிய ஆகமங்கள் சிவபெருமானுக்கு அங்கங்களாம்.

ஆகமம், சிங்தாந்தம், மந்திரம், தந்திரம் என்பன ஒரு பொருட்கிளவி. இவற்றின் விரிவை காமிகாகமம் தந்திராவ தாாப் படலத்திலும் பிற ஆக மங்களிலுங் கண்டுகொள்க.

இமை - ஒருமுறை கண்ணிமைத்தற்கு வேண்டும் பொழுது. அன்று, ஒ, எ - அசைநிலைகள். இரும்பு என்பது இருப்பு என வலித்தல் விகாரம் பெற்றது. இதுமுறை - மானதம், மந்தம், உரை என மூன்று வகைப்படும். அது 'மானத மந்தமுரை

யென்ன வொருமூன்ருகு, மானதநெஞ்சிற் செபிக்குமாறு: