பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுஉ திருவருணேக் கலம்பகம்

புல் ஆர் என்பு அணி தொடையார் - அறுகம் புல்லையும் ஆத்திப் பூவையும் பிரமவிட்டுணுக்களது எலும்பையும் தொடுத்த மாலையை அணிந்த சிவபெருமானாது, அருணை நாட்டில் - திரு வருணைப் பதியையுடைய நாட்டின்கனுள்ள, பொதுவர் குல மங்கையரே - இடையர்குல மகளிரே சொல்லாடின் உமக்கு - விசாரிக்கின் மக்கு, இரண்டு பசுவே(ய்) உண்டு - இரண்டு பசுவே யுள்ளது (இரண்டு பசிய மூங்கில் போன்ற தோள்கள் உள்ளன) ; சுமங்கிடு பால் கலசமும் அ துணை ஆம் - சுமக்கின்ற பாற்குடமும் அவ்வளவினதாகும் (சுமக்கின்ற தனங்களுமிரண் டாகும்); ஈதும் அல்லாமல் இடையில் மிக இளைத்துப் போனிர்இதுவே யன்றி - மத்தியில் மிகவும் இளைத்துப் போய் விட்டீர் (இடையினிடத்து மிகவும் தேய்ந்து போயிருக்கின்றீர்) ஆய் இருந்தும் - இவ்வாருக விருந்தும், இடைமதியோ - பின் புத் தியோ (இடைச்சாதியின் புத்தியோ), அகந்தையோ - கர் வமோ! புவிமேல் கண்டோர் எல்லாரும் - பூமியில் பார்த்தவர் கள் யாவரும், தனி தனி ஏடு எடுத்தக்காலும் - ஒவ்வொருவ ாாக நீர் கொண்டுவந்த தயிரிலே ஏடாகிய ஆடையை யெடுத் துக் கொண்டு போனபோதும் (தலையிலேயுள்ள பூவை யெடுத் துக்கொண்டு போனபோதும்), இரண்டும் உரையாமல் அகன்று எகுவீர் - உடன்படல் மறுத்தலென்ற இவ்விரண்டு வகையு ளொன்றுங் கூருமல் நீங்கிச் செல்வீர். (என்ருனென்க.)

தெருவிற் பால் தயிர் கொண்டுவிற்கும் இடைச்சியை நோக் கிக் காதல் கொண்டானெரு காமுகன் தனது வேட்கையை வெளிப்படுத்தி அவளை முன்னிலையாக்கிச் சொன்னதாகக் கூறு வது இடைச்சியாரென்னும் உறுப்பினிலக்கணமாம். இது காலத்தான் மருவியது.

சொல்லாடல் - ஒருசொன்னிர்மைத்து. சொல்லாடின் செயினென்னும் வாய்பாட்டு வினையெச்சம் ; சொல்லாடு-பகுதி,