பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் அ5 அன்-31

களே நோக்கித் தலைமகள் மேன்மேல் மிகவருந்த, அவளது துன்பத்தின் மெய்க்காரணத்தை யறிந்த தோழி அச்சமயத்திற் செவிலியரை நோக்கிச் சில கூறி வெறிவிலக்கித் தலைவியினது துன்பத்தின் உண்மைக் காரணத்தை யுணர்த்துகின்ற துறை இஃது ஆகும்.

ஆடு பலிகொடுத்தலானது இவளுடம்பினின்று உயிர் நீங்காதபடி செய்து மரண வேதனைப்படுகின்ற இவளைப் பிழைப் பிக்க மாட்டாது என்ற பொருளை யுட்கொண்டு, நீங்கண் மை யழிப்பது நீதியல்ல என்ருள். தான் கரையேருதவன் பிற ாைக் கரையேற்ற மாட்டாமை போல, தான் கழுத்தறுப்புண்டு இறக்கிற ஆடு இவளுயிரைப் பிழைப்பிக்க மாட்டாதென்க : ' வீழ்வார்க்கு வீழ்வார் துணை என்றபடி இறக்கிற ஒர் உயிரோ மற்ருேர் இறக்கிற உயிரைக் காத்தற்குத் துணை யாகும் !

மாதரீர் என்பது மாதாார் என்பதன் விளி. ஆம், இடைக் குறை : அசைநிலையுமாம். ஈங்கு - சுட்டு முதனிண்டது. அணிக் தவர் - வினையாலனையும் பெயர். வாங்கினல் - எ கிர்காலத் தெரி நிலை வினையெச்சம், அழிப்பது என்னும் பிற வினையைக் கொண் டது. அல்ல - எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று.

இவள் ஒருவர் கையிலிருந்த ஒலைச் சுவடியை வாங்கினல், நீங்கள் அவ்வேட்டிலிட்ட மையை அழித்துவிடுவது நீதி யல்ல என வேருெரு பொருள் படுதலும் காண்க.

இது எசு-ஞ் செய்யுள் போன்றதே. (காட)

தலைவியைப் புகழ்தல்

கட்டளைக்கலித் துறை அள்ளற் கடல்விட நீங்கா தகண்ட சருணைவெற்பிற் பிள்ளைப் பிறையுஞ் சிலையுமொப் பா.ந.கற் பேகைநல்லாள்