பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு.அ திருவருணேக் கலம்பகம்

வள்ளைக் குழைபொரு கண்ணுக்குத் தோற்றம்பும் வாரிதியுங்

கள்ளக் கயலு மிராசியின் மீனுங் கடைப்பட்டகே. on 5F

அள்ளல் கடல்விடம் நீங்காத கண்டர் - சேற்றையுடைய திருப்பாற்கடலிம் ருேன்றிய விடம் நீங்காத கண்டத்தையுடைய சிவபெருமாாைது, அருணேவெற்பில் - அருணகிரிப் பதியிற் சேர்ந்த மலேயின் கண், பிள்ளே பிறையும் - இளஞ்சங் கிானையும், சிலையும் வில்லையும், ஒப்பு:ஆம் ஒப்பாகின்ற, அகல்-நெற்றியை யுடைய, பேதை நல்லாள் - பெண்ணுகிய நல்லாளது, வள்ளை குழைபொரு கண்னுக்கு - வள்ளையிலையை யொத்த காதைப் பொருகின்ற நீண்ட கண்ணுக்கு, தோற்று - தோல்வி யடைந்து அம்பும் - பானமும், வாரிதியும் - கடலும், கள்ளம் கயலும் - வஞ்சகம் பொருந்திய சேல்மீனும், இராசியின் மீனும்-இராசியி லுள்ள மீனமும், கடைபட்டது - தாழ்மை யடைந்தது.

இங்ஙனம் தலைவன் வேட்கை மிகுதியால் தலைவியைப் புகழ்ந்து கூறினனென்க. பாணம் கம்மியனற் கடையப்பட்ட தென்றும், கடல் மந்தாகிரியாற் கடையப்பட்டதென்றும், கயல் விற்பதற்காகக் கடையிற் கிடப்பதென்றும், மீனம் இராசிகளி னிறுதிப்பட்டதென்றும் பொருள் கொள்க. பிள்ளைப் பிறை அட்டமி திதிச் சந்திரன். பிள்ளை ஈண்டு இளமையை உணர்த்தியது. துதல் - புருவமுமாம். பேதை - பெண்ணென்னு மாத்திரையாய் நின்றது. நல்லாள் - நன்மையைத் தருகின்றவள். ஆம் - தொகுத்தல். வள்ளை முதலாகுபெயர். கொடியென்பாரு முளர். பொருதல் - போர் செய்தல்; அதாவது, அணுகிசிற்றல் : அல்லது, காதளவு பொருங்கி நிற்றல். இராசி - மேடமுதலிய பன்னிரண்டு இராசி. எ - அசைநிலை. கடைப்பட்டது எனத்

தனித்தனி முடிவு கொள்க.

இது நேரசை முதலாய் வந்த கட்டளைக் கலித்துறை.(கச)