பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் ୍ର353ଳr J.)

வலைச்சியார்

அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

தேவியிட மகலாத வருணகிரி

வளநாட்டிற் றெருக்க டோறு மாவிரத முனிவரெலா மயல்கூரக்

கயல்கூறும் வலைச்சி யாரே காவிதிகழ் வாவியிலே மீன்பிடித்து

வருவே ாரைக் கண்டோங் கண்டோ ாாவியெலாம் பிடிக்கிழுக்கு முமைப்போல

வொருவரைக் கண் டறிக் தி லோமே. கூடு

தேவி இடம் அகலாத - உமாதேவியார் இடப்பாகக் கி னின்றும் நீங்காத சிவபிரான் எழுந்தருளியிருக்கிற, அருணகிரி வளம் நாட்டில் - அருணகிரியை யுடைய வளப்பம் பொருங் கிய நாட்டிலுள்ள, தெருக்கள் தோறும் - வீ.கிகளெல்லாம், மா விரதம் முனிவரெலாம் - அரியவிரதங்களையுடைய முனிவர்கள் எல்லாம், மயல்கடா - மயக்கமிகும்படி, கயல் கூறும் வலைச்சி யாரே - மீன்விற்கும் வலைச்சியாரே , காவிதிகழ் வாவியில் - குவளைமலர்கள் பொருந்திய தடாகத்தில், மீன் பிடித்து வரு வோரைக் கண்டோம் - மீன்களைப் பிடித்து வருகின்றவர் களைப் பார்த்துள்ளோம், உமைபோல - உம்மைப்போல, கண் டோர் ஆவி யெலாம் - பார்த்தவர்களது உயிரை யெல்லாம், பிடித்திழுக்கும் - பிடித்திழுக்கின்ற, ஒருவரை கண்டு அறிந் திலோம் - ஒருவரையாவது பார்த்து அறிந்திலோம். o

மீன் விற்கும் வலேயர் மகளைக் கண்டு காமுற்றவனெரு வன், அம்மகளை முன்னிலைப்படுத்திச் சிருங்காரமான வார்த்தை கள் பேசினதாகச் செய்யுள் செய்வது , வலைச்சியார் என்னும்

உறுப்புக்கு இலக்கணமாம். இது காலத்தான் மருவியது.