பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் உங்

நேரிசைவெண்பா

வேதநுவல் சோணகிரி வித்த கர்க்கார் வேருவாா சோதியிய மானனிவர் சோமனிவ-ாாகவனும் மண்ணுங்கா லும்புனலும் வானுமழ ருனுமிவ ரெண்ணுங்கா லெல்லா மிவர். se

வேதம் நுவல் - வேதங்களை யருளிச் செய்த, சோணகிரி வித்தகர்க்கு - அருணுசலத்திலுள்ள சதுரப்பா டுடையவர்க்கு, வேறு ஆவார் - வேருயுள்ளவர், ஆர் - யாவர் ? (ஒருவருமில்லை) ஏனெனில் ; சோதி இயமானன் இவர் - ஒளியையுடைய ஆன் மாவும் இவர், சோமன் இவர் - சந்திரனும் இவர், ஆதவனும் இவர் - சூரியனும் இவர், மண்ணும் - நிலனும், புனலும் - நீரும், அழல்தானும் - நெருப்பும், காலும் - காற்றும், வானும் இவர் - ஆகாயமும் ஆகிய ஐம்பூதங்களும் இவர், எண்ணுங்கால் - இவ் வாற்ருல் ஆராயுமிடத்து, எல்லாம் இவர் - எல்லாப் பொருள் களும் இவரே.

எல்லாப் பொருள்களு மிவாதலால் இவர்க்கு வேருவார் ஒருவருமில்லை யென்றபடி.

நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்பதே முறையாயினும், ஈண்டு, செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார்.

வேதம் என்பதற்கு ஞானத்தைத் தருவது என்று பொருள். எட்டு மூர்த்தங்களாய் விளங்கியுள்ளா ரென்பதை, : நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப் பகலோன், புலனய மைந்தனேடெண் வகையாய்ப் புணர்ந்து நின்ருன் ”. என்ற திருவாசகத்தா னுணர்க.

வேதம் நுவல் என்பதற்கு வேதங்கள் புகழ்ந்து சொல்லு கின்ற வெனினுமாம். இயமானன் - யாகத்துக்குத் தலைவர். தான் அசைநிலை.