பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

விளவார் கனிபட நூறிய கடல்வண் ணனும் வேதக்

கிளர்தா மரை மலர் மேலுறை கேடில் புகழோனும்

அளவா வண மழலாகிய வண்ணா மலை யண்ணல்

தளரா முலை முறுவல் லுமை தலைவன் னடிசரணே.


திருவருணைக் கலம்பகம் என்ற இந்நூல்க்லம்பகங்களுள் தலைசிறந்ததெனப் புலவர்களாற் போற்றப்படுவது; .நூன் முழுதும் சைவமணம் கமழ்வது; பாடல்தொறும் சிவபரத்துவம் பொங்கித் ததும்புவது; நவில்தொறும் நாநயம் பயப்பது; பயில்தொறும் பத்திச் சுவை புகட்டுவது; ஏனைய கலம்பகங்களுட் காணப்படாத சைவசமய குரவர்களின் துதி அமையப் பெற்றிலங்குவது.

ஆழ்ந்த கருத்துகளும், பொருட் செறிவும், பன்னயமும் பொருந்திய ஒப்பரிய இந் நூலுக்கு, காலஞ்சென்ற யாழ்ப்பாணத்து மேலைப் புலோலி நா. கதிரைவேற் பிள்ளையவர்கள் முப்பத்தைந்தாண்டுகட்கு முன், விளக்க வுரை யொன்றைத் திங்கள் வெளியீடாக எழுதிவரக் கருதி முதல்வெளியீட்டையும் எழுதிமுடித்துதவினார்கள்; தக்க ஆதரவின்மையாற் போலும் அதற்குமேல் அருளினார்களில்லை. பின்னர், மதுரைத் தமிழ்ச்சங்கத்தாரால் சேற்றூர்ச் சுப்பிரமணியக் கவிராயர் அவர்களைக்கொண்டெழுதுவித்த அரும்பதவுரை யொன்று அச்சேறி வெளி வந்தது ஆயினும், அது பண்டிதர்க்கும் பாவலர்க்குமேயன்றி மாணவர்க்கும் மற்றையோர்க்கும் பயன்படுவது அரிதாகவிருந்தது.பல்லாண்டுகளாக இருந்துவரும் ஏற்ற விளக்கவுரையொன்றில்லாத இக்குறையை நீக்கு