பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுச திருவானேக் கலம்பகம்

ணத்திற்கு அறிவு அரியார் - புகழ்ந்து சொல்லுகின்ற வேதத் திற்கும் அறிதற்கரியவராகிய சிவபெருமானாது, சோனுசலத் தில் - அருணகிரியில், சுகங்கள் கமை - கிளிகளை, கல்லால் எறிந்த பகைக்கு - கல்லின லெறிந்தவிரோதத்தின் பொருட்டு, வழிகாட்டாது ஒழிதல் கண்டாய் - தலைவர் போன வழியைக் காட்டாமல் நீங்குதலை யறிந்தாய், (ஆதலால் )ே எமக்கு உறுதி புகன்ருர் - எங்கட்கு உறுதி வார்த்தைகளைக் கூறிய தலைவர், (அதனைக்

Fo

எங்கு அகன்ருர் - எவ்விடத்திற்குச் சென்ருர் : கூறுவாயாக).

இச்செய்யுள், தலைவி புல்லாடவனைப் பார்த்து, தலைவன் சென்ற வழியை யிரங்கிக் கேட்டல் கூறியது.

தினைப்புனத்தில் விலங்கும் பறவையும் வாராமைப் பொருட்டுப் புல்லின ற் செய்யப்பட்டு வில்லும் அம்பு மேந்தி நிற்கும் ஆண்மகன் வடிவத்தைப் புல்லாடவனே என்று விளித் தாள் என்க. சோணுசலம் - சோண + அசலம்; வடமொழிப் புணர்ச்சி; தீர்க்க சந்தி: சோனம் - சிவப்பு (நெருப்பு); அசலம் - மலை; சலித்தலில்லாதது ; சலித்தல் - சஞ்சரித்தல்: செந்நிறம் பொருந்திய அக்கினிமலை யென்பது பொருள். எகாரங்கள் அசைநிலை. கொல்லாத, குனியாத என்னும் எதிர்மறைப் பெயரெச்சங்களின் ஈறு தொக்கது.

இது, மூன்று ஆறுசீர்கள் காய்ச்சீரும், ஏனைய மாச்சீரும் பெற்றுவந்த அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம். (க.க)

பிரிவு விலக்கல்

அறுசீர்க் கழிநெடிலாசிரியவிருத்தம்

ஆரும்வி ரும்பிய கல்விமே லாசையு மக்குள தாயிடிற்

பாருற வென் பொரு பாவையாப் பாடிய பாவலர் போலவே