பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Tெஉ திருவருணேக் கலம்பகம்

இருக்கின்ற, மடந்தை - பெண்ணின், இடையாம் - இடை யாகிய, ஒரு கொடியில் - ஒரு கொடியினிடத்தில், ஒன்று கமுகு - ஒன்று கமுகு, ஒரு பவளம் - ஒன்று பவளம், ஒன்று குமிழ் - ஒன்று குமிழம்பூ, ஒருமதி - ஒன்று சந்திரன், ஒன்று பிறை-, இருசிலை - இரண்டுவில், இரண்டு கணை - இரண்டு அம்பு, இருபணை - இரண்டு மூங்கில், இரண்டு குழை - இரண்டு இலை, இருமுலை - சிறப்புப் பொருந்திய முல்லை யரும்பு கள், இரண்டு மலை.-(உள்ளன.) -

இஃதோர் தெய்வத்தன்மை பொருங்கிய கொடியாயிருக் கின்றதெனத் தலைவன் தலைவியைப் புகழ்ந்தானென்க்.

கமுகு - கழுத்திற்கும், பவளம் - உதட்டிற்கும், குமிழ்-மூக் கிற்கும், மதி - முகத்திற்கும், பிறை - நெற்றிக்கும், சிலை - கண் புருவத்திற்கும், கணை - கண்ணிற்கும், மூங்கில் - தோளுக்கும், (வள்ளை) இலை - காதிற்கும், முல்லை - பற்களுக்கும், மலை - கொங் கைக்கும் உவமம். இருமை - மை விகுதி கெட்டது; சிறப்பு என்பது பொருள். இருமுலை என்பதில் இரு என்பது இரண்டு வரிசையை யுணர்த்திற்று எனினுமாம். முலை தொகுத்தல் விகாரம். குழை - காதணி யென்பாருமுளர். அருணையம்பதி என்பதில் அம் சாரியை.

கமுகமரம் குமிழம்பூ மதி பிறை சிலை பனை குழை முல்லை யரும்பு மலை மெய்யுவமம். பவளம் உருவுவமம். கணை தொழி லுவமம். பிறை - பாதிமதி. குமிழ், முல்லை - முதலாகு பெயர். இச்செய்யுளில் மூன்று நாலு அடிகளில் முறையே ஒன்று இரண்டு என்னும் எண்கள் பல வந்தது, சொற்பொருட்பின்

வருநிலையுணி. - - *

இது இறுதிச்சீர் கூவிளங்கனிச்சீரும் ஏனைய காய்ச்சீரும் பெற்றுவந்த அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம். (கூo)