பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

"பழகினும் பார்ப்பாரைத் தீப்போல ஒழுக' வேண்டும் எனவும் உள்ள அடிகள் தமிழரிடையே அவர் காணப்பட்ட பங்கையும் காட்டுகின்றன. இவைபோன்று மேலும் பல உள்ளன. - -

இவற்றையெல்லாம் ஒன்றுகூட்டி ஒரு மீள் பார்வை யிட்டால்,

'அந்தணர் பார்ப்பனர்:

கடவுளரும் அந்தணர்-பார்ப்பனர்" என்னும் ஒரு வகைக்கருத்தும்,

'அந்தணர் துறவியர்

அந்தணர் எந்தக்குல இனத்துள்ளும்

அடங்காதோர்’ என்னும் மறுவகைக் கருத்தும்,

'பார்ப்பனர் போற்றத் தக்கவர்;

பார்ப்பனருள். இழிந்தவரும் புகடிக்கு

உரியவரும் இருந்தனர்' என்னும் இருவகைக் கருத்தும் ஒரே கால வட்டத்தில் தமிழ் மண்ணில் நிலவின என்றுதான் அறிய முடி கின்றது. . . . -

இவற்றை நோக்கும் எவரும் அத்தணர் பற்றி ஒரு குழப்பமான கருத்தையே காணவேண்டி நேரும். ஆம்; குழப்பமான கருத்துச் சூழ்நிலைதான் திருவள்ளுவர் காலத்தில் நிலவியது. - அந்தனர் பார்ப்பனர் அல்லர்

திருவள்ளுவர் இக்குழப்பத்தை-அந்தணர் யார் என்னும் குழப்பத்தை நீக்கி ஒரு தெளிவான கருத்தைப்

o

1. நல்லாதனார் திரி : 42-2