பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 93

மனத்துக்கண் மாசிலன்' ஆகிய அறம் கொண்டவர் எனக் காட்டுகிறது.

மாந்தர்க்குச் சொன்ன இதனையே திருவள்ளுவர் தாம் குறித்த இறைவனுக்கும் ஏற்றி

அறம்ஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிற ஆழி நீந்தல் அரிது’’’ என்றார். இறைவனை அறக்கடல் (கடல் போன்று பரந் தும் விரிந்தும் ஆழ்ந்தும் செயற்படும் அறம்) என்று அறத்துக் குள்ளே வைத்து அந்தணன் என்றார். எட்டுக் குணங் களை இறைவனாக உருவாக்கியவர் அறம்' என்னும் செத் தண்மை என்னும் அருள் குணத்தையும் இவ்வாறு அறம் ஆழி அந்தணன்' என்றார்.

'அறம் ஆழி அந்தணன்' என்று திருவள்ளுவர் அமைத்தது,

'நுண்ஞாண் பூணுால் மார்பின்

யாழ்கெழு மணிமிடற்று அந்தணன்' .

என்று பூணுரல் அணிந்த பார்ப்பன இனத்தவனாகச் சிவனைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியதற்கு மாற்றுக் கருத்தாகும்; மறுப்புக் கருத்து என்றும் கொள்ள வைக்கிறது.

அந்தணர் நூல் எது?

திருவள்ளுவர் தம் நூலில் அந்தணர் என்னும் சொல்லை மூன்று இடங்களில் ஆண்டுள்ளார், மேலே கண்ட இரண்டு நிற்க, மேலும்,

1. பாரதம் பாடிய : அகம். க. வாழ்த்து 3, 15.

பெருந்தேவனார்.