பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

கின்றது மன்னவன் கோல்' (543)

என்று மன்னவன் செங்கோலாட்சியில் அமைத்தார். இங்கு, 'அந்தணர் நூல் என்றது முன்னர் பதித்த அந்தணர் என்னும் அறவோர்-தமிழ்ச்சான்றோர் படைத்திட்ட நூல்களேயாகும். ஆனால், உரையாசிரியர் அனைவரும்,

அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும்’

என்று பொருள் எழுதினர். இங்கும் அந்தணனைப் பார்ப்பனர் என்று கொண்டு நூலை வேதம் - நான்மறை என்றனர். ஒட்டுமொத்தமாக இக்கருத்து பொருந்தாத தாகும். எவ்வாறு? .

திருவள்ளுவர் பார்ப்பனர் வேதத்தை நான்மறையைக் கூறக் கருதியிருந்தால் முன்னர் *

மறப்பினும் ஒத்துக் கொளலாகும்’ (134)

என்று நான்மறையை ஒத்து’ என்னும் சொல்லால் குறித். தது போன்று,

'அந்தணர் ஒத்தோ டறத்திற்கும் ஆதியாய்” என்று பாடியிருப்பார். அவ்வாறன்றிப் பொதுவாக நூல் என்றமையின், செந்தண்மை பூண்ட அறவோர் நூல் களையே குறிக்கும், *

மேலும் அடுத்த அதிகாரமாம் கொடுங்கோன்மையில், !

“ஆபயன் குன்றும்; அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின் (560)