பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் . . . 99%

தந்துள்ளது. இது சோறு வழங்கி உயிர்வாழச் செய்யும் உழவைத் தாழ்த்தும் நன்றிகெட்ட கருத்து. -

இது மனு நூலாரின் - அதனை ஏற்றவரின் நன்றி யில்லா உணர்வை வெளிப்படுத்துகிறது. அத்துடன் தம்மை உயர்த்திக்கொள்ளும் சாதித் தினவையும் குறிப் பாகக் காட்டுகிறது. உழவு இழிதொழில் என்றோர் அதனைப் பார்ப்பனர் செய்தால் அவரும் இழிந்தவர்போல், தள்ளிவைக்கப்பட்டனர்.

'தாமே உழுதொழில் செய்து உண்ணும் இழிதொழி. லைச் செய்யும் பிராமணர்களைத் தென்புலத்தார்க்குச் செய்யும் கடன்களுக்கு அழைக்காமல் ஒதுக்க வேண்டும்’ என்கிறது மனுநூல்.

இத்தகைய வேண்டாத கருத்துக்கள் - பகுத்தறி விற்கு ஒவ்வாத கருத்துக்கள் திருவள்ளுவர் காலத்தில் தமிழ் மக்களிடையே பரப்பப்பட்டிருந்தன. இவற்றைத் தமிழர் ஏற்று நம்பித் தம்மைத் தாமே தாழ்த்திக்கொண்டு வாழ்ந்தனர்.

நான்காம் சாதி - நாலாஞ்சாதியாய் அதாவது சூத்திரன்’ என்ற இழிமகன் பொருளுடையதாகித் தமிழர் களே கூறிக்கொள்ளும் அவலநிலை நேர்ந்தது.

இந்நிலை எளிய மக்களிடைமட்டுமன்று அறிவார்ந்த சான்றோரிடத்தும் குடிகொண்டது. புலன் அழுக்கற்ற அந்தணாளன் எனப் போற்றப்பட்ட சான்றோர் கபிலரே,

'பார்ப்பார்க் கல்லது பணிபு அறியலை” என்று செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் சேர மன்னனைப் பாடினார். உழுதொழில் செய்யும் நான்காம்