பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

『00 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

சாதியான் மட்டுமல்லன் இரண்டாம் சாதி அரசனும் அந்த மனுவின் கட்டுப்பாட்டாளன் ஆனான் என்பதை இவ்வடி சொல்கிறது.

உழவே தலை

தாம் வாழும் மண்ணின் உயிர் காக்கும் தொழிலாகிய -உழவைச் செய்வோர் தாழ்த்தப்படுவதைக் கருதாமல் திருவள்ளுவர் பாராமுகமாக இருப்பாரா? உழவு என்று ஒரு தனி அதிகாரம் அமைத்துப் பத்துக் குறட்பாக்களை அமைத்துள்ளமையே திருவள்ளுவப் பெருந்தகையின் மண்ணின் மைந்தரைப் போற்றும் உள்ளுணர்வை வெளிப்

படுத்துவதாகும்.

தமிழறிந்த பார்ப்பனப் புலமையோரும், அவர் வழியே தம் வழி என்று தொடர்ந்த தமிழரும் போற்றிய மனுவின் கோட்பாட்டை எதிர்த்துக் குறள் வாயிலாகக் குரல்

கொடுத்தார் திருவள்ளுவர்.

மனு நூல்,

“உழவு இழிதொழில்’

என்றது.

திருவள்ளுவர்,

'உழவே தலை’ (1031)

என்றார்.

மனு,

“உழுதொழிலை எவன் செய்தாலும்

அவன் தாழ்ந்தவன்'

என்றார்.