பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

உழவால் விளைந்த நெற்கதிராகிய குடைநிழலின் அமர்ந்த மன்னன்

'பலகுடை நீழலும் தம் கு.ைக்கீழ் காண்பர்’ (1034) என்று மன்னனையும் உழவின் நீழலில் அமரவைத்தார்.

உழவர் உழுதொழில் செய்யாது கைகளைக் கட்டிக் கொண்டால்,

'விழைவு அது உம் விட்டேன் என்பார்க்கும்’ (1035) அவர் துறவு நிலை பயனில்லை என்றார். -

எனவே உழவு என்னும் ஓர் அதிகார அமைப்பே வடவர் புகுத்திய மனு முதலிய வடபுல நூல்களின்சாத்திரங்களின் மறுப்புப் பதிவாகும். தமிழ்ப் பகுத்தறிவு முனையாகும்.

சாதியின் வேர் சாத்திரம்

மனு, உபநிடதம் முதலியவற்றை வடமொழியில் 'சாத்திரம்' என்பர். வடமொழியிலுள்ள சாத்திரம் ஒவ் வொன்றும் சாதிப்பிரிவையும், அவற்றுள் உயர்வு தாழ்வை யும், அவற்றுள்ளும் பார்ப்பனரே உயர்ந்தவர் என்பதையும் சொல்லாமல் செல்லாது.

இதனைப் படித்து அறிந்து உணர்ந்த நம் காலத்துக் கவிமாமன்னர் பாரதி,

'சாத்திரங் கண்டீர் சாதியின் உயிர்த்தலம்'

என்றார். - .

'சாத்திரம் இன்றேல் சாதியும் இன்றாம்' ! - என்று பாடினார். சாதி என்ன செய்யும்? பாரதியின் விடை : - - - . -

1. சுப்பிரமணிய பாரதி சி : பார. பா : 2465-55,56