பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் . . . 103

"ஞானம் பொய்க்க நசிக்குமாம் சாதி”

என்பது.

தமிழ்ச் சாதி-பாரதி

சாத்திரங்களால் தாழ்த்தப்பட்டு நலிந்த தமிழ் மண்ணின் மக்களை ஒருங்கிணைத்துப் பார்த்த பாரதி அவர்களை தமிழ்ச்சாதி’ என்றார். இத்தலைப்பில் நீண்ட அகவல் ஒன்றை எழுதினார். அதில் தமிழ்ச் சாதி மக்கள் நாளுக்கு நாள் எவ்வெவ்வாறு நலிந்தனர் என்பதை,

'நாட்பட காட்பட காற்றமும் சேரும்

பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் நோய்க்களம் ஆகி அழிக எனும் நோக்கமோ? விதியே விதியே! தமிழச் சாதியை என்செய் நினைத்தாய்? எனக்குரை யாயோ?'1 என ஒலமிட்டார். விதிக்கப்பட்டதாகக் கொண்டு விதியே விதியே’’ என்று ஓலமிட்டார்.

வளமான பொய்கைபோல வாழ்ந்த தமிழ்ச்சாதி மக்கள்

நோய்க்களமாம் சாக்கடையாவாரோ' என்று கவன்று, கலங்கி ஒலமிட்டார்.

இங்கே தமக்கு நாமே ஒரு வினாவை எழுப்பிக்கொள்ள நேர்கின்றது. வினா இது : .

மனு முதலியன விதித்துப் பதிந்தவற்றை ஆணிப் பாய்வாக மறுத்த திருவள்ளுவர் கருத்துக்கள் என்ன வாயின?

விடை உள் ள வினா

திருவள்ளுவருக்குப் பின்னும் வடமொழியாளர் தம் கருத்துக்களை நம்ப வைத்தனர். இடைக்காலத்தில் எழுந்த

1. சுப்பிரமணிய பாரதி : சி. பார. பா : 2465-2-6.