பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

நூல்கள் தமிழ்க் கொள்கைக்கும், மக்களைச் செம்மைப் படுத்துவதற்கும் முனையாமல் கடவுளையும், சமயத்தை யும் போற்றி நிமிர்த்தும் கருத்தில் சிற்றிலக்கியங்களாகப் பெருகின. மறுபுறம் மன்னர்களையும், செல்வர்களையும் மலிவான மகிழ்ச்சியூட்டும் சிற்றிலக்கியங்கள் பெருகின, இவ்விரு வகைச் சிற்றிலக்கியங்களும், காப்பியங்களும், புராணங்களும் திருவள்ளுவர் தம் திருக்குறளை எடுத் தாண்டன. ஆனால், தம் கருத்திற்குப் போலியான முறை. யில் மேற்கோள் காட்டின. திருவள்ளுவரைப் போற்றின. ஆனால், பொது மக்களின் தாழ்வையும், நலிவையும் தீர்க் கும் புதுமைக் கருத்துள்ள குறட்பாக்களின் கருத்தை விரி வாக்கவில்லை. மேலே கண்ட கடல் பரப்பான நூல்களுக் கிடையே திருக்குறளின் பெயர் மிதந்ததே தவிர குறள் ஊட்டம் செலுத்தப்படவில்லை.

15-ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய சித்தர் பலர் மக்களைச் சமப்படுத்தும் பாடல்களை இயற்றினர் ஆனால், ஆன்மீகக் கருத்துக்களைப் புதிர் புதிராகக் கொண்ட அவர்தம் பாடல்களுக்கிடையே பகுத்தறிவுக் கருத்துக்கள் அள்ளித் தெரித்த கடுகுகள் ஆயின.

என்னதான் மறைக்கினும், எவ்வளவுதான் புகுத்தினும் திருவள்ளுவர்தம் பகுத்தறிவுக் கருத்துக்கள் வைரங்களாய்ப் பளிச்சிட்டு விளங்குகின்றன. ஆம், மேலே கண்ட ஒவ்: வொரு பகுத்தறிவு முனையும் வைரக் கூர்முனைகளே யாகும்.

மூன்றாவதான மூடக் கொள்கைகளை அடையாளங் காட்டும் திருவள்ளுவரைக் காண வேண்டும்.