பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. மூட ஒழிப்புக் கொள்கை

மூடம்-என்றால்

மூடம் என்றால் அறியாமையின் மேல் எல்லை. எதற். கும் காரணத்தை அறியாமை; அறிவிற்குப் பொருந்துமா என்பதை அறிய முயலாமை, அறிந்தும் அறியாமலும் கண்ணை மூடிக்கொண்டு கடைப்பிடிப்பது - இவற்றின் ஒட்டு மொத்தம் மூடமாகும். மூடத்தைத் தொடர்வதற்கு அச்சமும் சிறிய அவாக்களும் தூண்டுகோல்கள். சுருக்க மாகக் கண்மூடிப் பழக்கம்’ என்பர்.

இக்கண்மூடிப் பழக்கம் பகுத்தறிவை நெருங்காதது. இக்காலத்தில் இவ்வகை மூடங்கள் பலவாக உள்ளன.

சகுனம் (எதிர்ப்படல்); சடங்கு (கரணம்); விரதம் (நோன்பு); சாத்திரம் (கலைநூல்) சோதிடம் (கோள்பயன்); அருச்சனை (மலர்ப்போற்றி). ஆராதனை (வழிபாடு); விதி (தலையெழுத்து); மோட்சம் (வீடுபேறு); நரகம் (நிரயம்-அளறு).

இவையனைத்தும் காரணங்காணாப் பழக்கங்களாகத் தமிழ் மண்ணில் கொள்ளப்பட்டு வருகின்றன. அடைப்புக் குறிக்குள் உள்ளவை முன்னுள்ள வடசொற்களுக்கு உரிய தமிழ்ச் சொற்கள். இத்தமிழ்ச் சொல் ஒவ்வொன்றும்

தி.ப-7