பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

என்று தலைவி காதலால் உடல் நலங் குன்றும் நிலையைப் பத்துக் குறட்பாக்களால் பாடிய திருவள்ளுவர், இதற்காக நாட்டில் சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட வெறியாட்டு பற்றிப் பாடவில்லை.

அச்சமும் அவாவும்

மக்களை அச்சுறுத்தவும், அவர் மூட்டவும் புகுத்தப் பட்டவை இவை. நான்மறை, மனு முதலியவற்றின் ஏற். பாடுகளைக் காட்டிப் புகுத்தப்பட்டவை இவை. இக் கருத்தை ஒரு தொல்காப்பிய நூற்பா கொண்டும் உணர லாம். கரணம்’ என்னும் சடங்கு தோன்றியது எவ்வாறு?, தொல்காப்பியர் கூறுகிறார்:

'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் (பெரியோர்) யாத்தனர் கரணம் என்ப’.

மக்களிடம் வாழ்வியல் பொய் தோன்றியது. ஒருவர்க் கொருவர் வழுவினர். கண்ட பெரியோர் அச்சுறுத்தித் திருத்தவும், அவா மூட்டி மாற்றவும் கரணங்களைப் படைத்தனர். எனவே, கரணம் இடையில். படைத்துப் புகுத்தப்பட்டது.

அப்படைப்பு வடவர் வழி மந்திரம் ஓத எழுந்ததாகும். அது போன்றே பிற அறிவிற்கொவ்வாத பழக்கங்களும். புகுத்தப்பட்டன. -

இவ்வாறு புகுத்துவதற்கு மக்களது குறைபாடுகள் இட மளித்தன. குறை, குற்றம், வழு இவற்றைக் காட்டி இவற்றால் 'நீ நரகம் அடைவாய்' என்று அச்சுறுத்தினர்.

1. தொல்காப்பியர் : தொல் .

பொருள்: 143