பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்டும் அதனைச் செய்யாமல் திருந்து என்று வள்ளுவர் புகட்டிய எளிய அறிவுரை ஆகியவையான திண்மைக் கருத்துக்களைத் தெளிவுற எழுதி திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனைகள் தமிழகத்தின் பண்பாட்டுச் சுனைகள் எனப் பகுத்தறிவு உலகின் முன் வள்ளுவத்தை வானைத்தொடும் சிகரமென உயர்த்தேத்தியுள்ளார் கவிஞர் இளஞ்சேரன். இந்நூலில் நடுநிலை ஆய்வுக்குட்பட்டது என இளஞ்சேரன் தெளிவான சான்றுகள் கூறுகிறார். எந்த நூலாயினும் அதில் உள்ளவை அனைத்தும் நூலாசிரியர் உட்கிடக்கையல்ல. அவர் எடுத்து மொழியப் புகுந்தமைக்குச் சான்றுகள இருக்கும்; எடுத்துக்காட்டுக்கள் இருக்கும்; பிற செய்திகளும் இருக்கும். வேறுபட்ட கருத்துக்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றையெல்லாம் ஒருங்குவைத்து நோட்டமில்லாமல் நூலாசிரியர் தந்துள்ளவற்றைச் சுருக்கமாக இரண்டில் அடக்கலாம். ஒன்று கருத்து மற்றொன்று செய்தி. செய்திகள் ஆசிரியர் கொண்ட கருத்தின் சார்புகள் அல்லது துணைகள். கருத்துக்கள் இரண்டு வகைகளாக அமையலாம். ஒன்று, நூல் நோக்கக் கருத்து, மற்றொன்று கே. பிள் விளக்கத்திண்மைக்கு உரமாகும் கருத்து. இங்கு முதலில் நூல் நோக்கத்திண்மைக்கு உரமாகும் கருத்தைக் குறித்துக்காட்ட வேண்டும்.

இவ்வாறு திருவள்ளுவரின் அணுகுமுறை குறித்து விளக்கிவிட்டு, அதே வழியில் தாம் கொண்டுள்ள