பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$10 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

திருவள்ளுவர்தம் நூலில் அமைத்துள்ள சில கருத்துக் கள் நாம் கருதும் பகுத்தறிவுக்கு ஈடு கொடுக்காமலும் உள்ளன. அவற்றிற்கு அவர் அமைத்துள்ள சொற்களே அறிகுறிகளாக உள்ளன.

"இருவினை' (51: 'ஊழ்” (380) "எழுபிறப்பு” (62); மறுமையும், இம்மையும் 1981 மேலுலகம்' (226]; புத்தேளுலகம்' (58) "இன்னா உலகம் (243) வேட்டல் வேள்வி

- - செய்தல் (2591

இச்சொற்கள் கொண்ட பொருள்கள் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டவையாக இருக்கலாம். ஆனால், அவை குறிக்கப்பட்டுள்ள இடம், குறிக்கும் முறை, குறிப்பாகச் சுட்டும் கருத்து முதலியவை திருவள்ளுவரின் உள்ளார்ந்த நோக்கங்களை அடையாளங் காட்டுகின்றன.

மேலுள்ளவற்றில் எழுபிறப்பு, மறுமை இம்மை’ என்னும் இரண்டும் திருவள்ளுவர் ஏற்றுக்கொண்டவை யாக உள்ளன. எவ்வாறெனில் இவை இரண்டல்லாமல் இருவினை முதலியவற்றை அவர் குறித்துள்ள முறை களாலும், கருத்துக்களாலும் தமக்குரிய விலிமையை இழக் கின்றன. வலிமையை இழப்பன மட்டுமல்ல அவை வலியுறுத்தப்படாமல் ஏறத்தாழ தொய்வு ஏற்படவும்: செய்கின்றன. ஒவ்வொன்றாகக் காணலாம்.

இருவினை

ஆன்மிகத்தார் நல்வினை, தீவினை என இரண்டை வகுத்துள்ளனர். நல்வினை செய்தால் இம்மையிலும் நன்மை கிட்டும்; மறுமையிலும் நன்மை கிட்டும்; தீவினை செய்தால் முறையே இரண்டிலும் தீமை நேரும்.