பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன் - 111

திருவள்ளுவர் வினை’ என்னும் சொல்லைச் செயல்’ என்னும் பொருளிலேயே கையாண்டுள்ளார். தீவினை அச்சம்' என்பது ஒரு அதிகாரத் தலைப்பு. தீமையைத் தரும் செயலைச் செய்ய அஞ்சவேண்டும் என்னும் கருத்தே இவ்வதிகாரத்தில் உள்ளது. இதுபோன்று 'ஆள்வினை உடைமை, தெரிந்து வினையாடல், வினை செயல்வகை, வினைத்திட்டம், வினைத்துாய்மை' எனும் அதிகாரத் தலைப்புகளும் பொருளும் அமைந்துள்ளன. ஆன்மீகத்தார் கருதும் புண்ணியம், பாவம்' என்னும் பொருள்களில் இல்லை.

திருவள்ளுவர் தீவினை, நல்வினை என்னும் தொடர் களைக் கையாண்டுள்ளார். அவை எப்பொருளில் குறிக்கப் பட்டுள்ளன?

'தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்’’ [209] இக்குறளின் பொருள் என்ன?

"எவனும் தன்மேல் தானே அன்புகொள்ள வேண்டும். அவ்வாறு கொள்ள, பிறர் எவருக்கும் தீய செயல் சிறிதளவும் செய்யக்கூடாது.”

தீவினையால் நேரும் பயனை ஆன்மீகத்தார் மறுபிறவி யிலும் தீமை தருவதாகச் சொல்வர். திருவள்ளுவர் அதற்கு மாறாக தீமையைக் கருதாதவன் தன் வாழ்வில் தன்மேல் அன்பு கொண்டவன் ஆகான் என்று பயன் கூறி யுள்ளார். தீவினைப் பால்’ என்றது, தீய செயலின் பகுதி எனப் பொருள்படும். -

'காச்செற்று விக்குள்மேல் வாராமுன் கல்வினை

மேற்சென்று செய்யப் படும்’ - [335]