பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

பேச முடியாமல், விக்குள் வருகின்ற இறுதிநாள் வரும் முன்னர் கல்லவயனைத் தரும் செயலை மேலும் மேலும் செய்யவேண்டும். வாழ்நாளில் தொடர்ந்து நல்ல

செயலைச் செய்யவேண்டும்’ என்றார். ஆனால், பரிமேலழகரோ வீட்டின்பம் பெற நல்வினை செய்ய வேண்டும் என்று அவாவை மூட்டி மக்களைக் கயவராக்கினார்.

இவையிரண்டு குறட்பாக்களிலும் தீவினை, நல்வினை எனும் சொற்களை அமைத்தார். ஆனால் ஆன்மிகத்தார் கொள்ளும் புண்ணியம், பாவம் என்னும் பொருள் கொடுக்காமல் தீயசெயல் நல்ல செயல் என்னும் பொதுப் பொருளையே குறித்தார். இது வேண்டுமென்றே இரு சொற்களையும் கையாண்டு அவைகொண்டே ஆன்மீகத்துப் பொருள்களை மறுப்பதாகிறது.

எனைவகையான் தேறியக் கண்ணும் வினை வகையான்

வேறாகும் மாந்தர் பலர். 1514)

என்னும் குறளில் நாம் காணும் கருத்து என்ன? இது * தெரிந்து வினையாடல்" அதிகாரத் தில் உள்ளது. ‘ஒருவனை எல்லா வகையிலும் ஆராய்ந்து பார்த்துப் பணியில் இறக்கினாலும் அவன் செய்யும் செயலின் - வேலையின் தன்மையால் வேறுபடுவான்; அவ்வாறு பலரும் வேறுபடுவர் என்று பொதுவான செயல் பற்றியே, குறித்தார். இதிலும் ஆன்மீகத்தார் வினை இல்லை.

'முன்செய்த நல்வினையால் இப்பிறவியில் உயர்ந்து பயன்பெறுவான். தீவினையால் தாழ்ந்து போவான்’ என்பது ஆன்மீகத்தார் சொல்லும் வினைப்பயன். திருவள்ளுவரோ இதனை மறுத்து,