பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 1 #3

பல்லக்கைத் துரக்குபவனைக் காட்டி இவன் முன்னே அறம் செய்யாததால் இவ்வாறு தாழ்ந்தான்’ என்று சொல்லாதே. மேலே அமர்ந்தவன் முன்னே அறம் செய்ததால் உயர்ந்தான்' என்று சொல்லாதே என்று அடித்துச் சொல்லிய குறள்,

'அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோ டுர்ந்தா னிடை” [37յ

என்பது.

பரிமேலழகரோ உள்ள சொற்களைக் கொண்டு பொருள் கொள்ளாமல், வாயால் சொல்ல வேண்டியதில்லை. 'காட்சியளவால் உணரப்படும்’ என்று குறளில் இல்லாத சொற்களுக்குப் பொருள்விரித்தார், இது வலிந்து கொள்ளப் பட்ட பொருள். இவ்வாறு கொள்வது குறிப்பெச்சம் என்னும் இலக்கணத்துள் அமையுமாயினும் வலிந்து கொள்ளப்படுவது. நேர்வழி இருக்க வீண் வழியில் அலை வானேன்?

நேர்மையாக வாழ்பவர் கெடுவதும் உண்டு;

பொறாமை கொண்டவர் வளர்வதும் உண்டு;

இவற்றைக் குறிக்கத் தொடங்கி அதற்குக் காரணம் சொல்லவிரும்பினார் திருவள்ளுவர். இந்த முரண்பாடான பயனுக்குக் காரணம் விளங்காத நிலைபெற்றது போன்று இதனை அவனவன் செயல்பற்றி ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும்’ என்பதை நினைக்கப்படும்' என்னும் சொல் வைத்து,

'அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான்

கேடும் கினைக்கப் படும்’ slé91

என்றார்.