பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 117

நல்லூழ் இல்லையெனில் வறுமையடைந்து துறவி

யாவர் - (378). இவ்வாறு ஊழின் வல்லமை அவ்வதிகாரத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது. இவற்றிற்கெல்லாம்-ஊழின் வல்லமைக் கெல்லாம் மணிமுடி சூட்டியது போன்று இறுதியாக,

'ஊழிற் பெருவலி யாவுள'? (380)

என்று வினாவி ஊழைவிட வலிமையுடையவையும் இல்லை’ என்று முடிவும் கூறப்பட்டுள்ளது. அதற்கு மேலும் ஈடில்லாத பெரும் வல்லமை உடைய ஊழை ஏதேனும் ஒன்று எதிர்த்துச் சூழ்ந்தாலும் ஊழ்தான் முன்னேறும் என்பதை,

'மற்றொன்று சூழினும்தான் (ஊழ்) முந்துறும்’

என்னும் அடியால் இறுதி முடிவாக்கினார். இந்த முடிவு ஊழின் வல்லமைக்குக் குத்தப்பட்ட முத்திரை. இத்துணை அழுத்தமாக வேறு ஒன்றும் திருவள்ளுவரால் வலியுறுத்தப் பெறவில்லை எனலாம்.

இதற்குப் பின்னரும் ஊழ் பற்றிய திருவள்ளுவர் கருத்தில் பகுத்தறிவு முனை இருக்கிறதா’(?) என்றே வினவத்தோன்றும். தோன்றுவதில் தவறில்லை.

ஊழைப்பற்றி அடுக்கிஅடுக்கிச் செல்லப்பட்ட வல்லமை கள் அனைத்தும் உண்மைகளாகவே கருதப்பட்டிருக்கலாம். ஆனால், எதற்காக இத்துணை அடுக்கினார்? ஏன் அழுத்த, மாக அடுக்கினார்? -

கம்பரின் அம்பு

சற்று கம்பரைப் பார்க்க வேண்டும்,