பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 18. திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

கம்பராமாயணத்தில் இராவணன் பெரும் வல்லமை கொண்ட அரசமறவன். அவன் வலிமையைக் கம்பர் ஆங்காங்கு விரிவாகவே பாடியுள்ளார். நிறைவாக, இராவணன்,

'மூன்றுகோடி வாழ்காள் உடையவன்' முயன்று பெற்ற பெரும் தவம் உடையவன்' 'எவ்வுலகின் எந்தக் கோடியிலும் எவராலும் வெற்றி கொள்ள முடியாதவன்: அத்தகைய வரம்பெற்றவன்' 'உலகின் திக்கெல்லாம் போய்ப் போர்செய்து வென்ற தோள்வலிமை உடையவன்'

என்றெல்லாம் அடுக்கி அடுக்கிப் புகழ்ந்து பாடினார். முன்னரும் இங்கும் இராவணன் வல்லமை அழுத்தமாகவே அடுக்கப்பட்டுள்ளது. ஏன்?

இராவணனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்னும் கருத்து கம்பருக்கு இருந்ததா? அவன் வல்லமையைப் பாடும் ஆர்வம் உந்தியதா? இல்லை. பின் ஏன் வல்லமை அடுக்கப் பட்டது? இங்குதான் கம்பருக்கிருந்த உள்ளார்ந்த நோக்கும் தலை நீட்டுகிறது.

திருவள்ளுவரின் உள் நோக்கம்

அந்த உள்ளார்ந்த நோக்கம் என்ன?

தான் போற்றப் புகுந்த இராமனை மாவீரனாகக் காட்டவேண்டும் என்பதே. ஈடில்லாத வல்லமை பெற்ற 'இராவணனை வீழ்த்தியவன் இராமன்' என்றால் அது இராமனை மிகச் சிறந்த மாவீரனாகக் காட்டியதாகும் அன்றோ? இராவணனின் வல்லமைகளை அடுக்க அடுக்க அத்தகையவனை வீழ்த்திய இராமனின் வல்லமைப் பெருமை முடுக்கி முடுக்கி உயர்த்தப்பட்டதாகும் அன்றோ?