பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுகுமுறையில் வள்ளுவத்தில் கானும் பகுத்தறிவைத்தம் நூல் மூலம் சிறப்புடன் தந்துள்ளார் இளஞ்சேரன்.

இருபது பகுத்தறிவுமுனைப் பிரிவுகளிலும் குறட்பாக்களை எடுத்துக்காட்டுவதோடு, சான்றாகச் சங்கத் தமிழ் நூல்களில் காணப்படும் கருத்துச் செய்யுட்களையும் இணைத்துக் காட்டியுள்ளார்.

திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை' எனும் இந்தப் போற்றற்குரிய ஆராய்ச்சி நூல், கவிக்கோ கோவை இளஞ்சேரனின் பல ஆண்டுகாலச் சிந்தனையினையும் அவர் வழிநின்று காட்டும் பகுத்தறிவு நெறியினையும் துணைகொண்டு வெளிவந்துள்ள பகுத்தறிவுக் கருவூலம்

புகழ்வதில் ಶ್ಟ!! -

விழித்தெழவேண்டிய தமிழ் இளைஞர் உலகிற்கு, இந்த நூல் பெரிதும் துணை புரியும் அறிவார்ந்த வாழ்வின் பாதுகாப்பிற்கு இஃது ஒரு கேடயம்; இளைஞர்களின் சமுதாயப் புரட்சிக்கு இஃது ஒர் அறிவாயுதம்

சுயமரியாதைத் தடத்தில் சுடரேந்திப் பயணம் செய்துவரும் கவிஞர் இளஞ்சேரனின் படைப்பைப் பாராட்டுவதுடன் அவர்தம் உயரிய ஆற்றலையும் போற்றுகிறேன். -

(ஒம்) மு.கருணாநிதி

(vii)