பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

இங்கு எடுத்துக் கொண்ட கருத்தின் வலிமைக்காக இந்த அம்பை ஆள்வினையுடன் பொருத்திப் பார்க்கலாம் :

அம்பு,

புயவலியைத் தின்றது';

'மார்பில் புக்கு ஓடியது';

  • உயிரைப் பருகியது:

புறம் போயிற்று';

திருவள்ளுவர் காட்டும் ஆள்வினையோடு இவை பொருத்திப்பார்க்கக் கூடியவை. திருவள்ளுவர் குறிக்கும் ஆள்வினையாளர்,

உலைவின்றி

தாழாது உஞற்றுபவர்; 'உப்பக்கம் காண்பர்.

இராவணனின் அடுக்கடுக்கான வல்லமையை இராமனின்

ஓர் அம்பு நான்கு செயல்களால் வென்றது. அடுக்கடுக்கான்

வல்லமை கொண்ட ஊழை ஆள்வினையாளர் நான்கு ,செயல்களால் உப்பக்கமாம் புறங்கண்டு வெல்வரர்.

கம்பர் பெற்ற இரவல்

இங்குக் கம்பராமாயணத்தைக் காட்டுவது திருக் குறளுக்கு மேற்கோள் அன்று. திருவள்ளுவர் கடைப்பிடித்த உத்தியைக் கம்பர் இரவல் பெற்றுக் கடைப்பிடித்துள்ளார் என்பது கருதியேயாகும். கம்பர் திருவள்ளுவர்தம் திருக்குறள் கருத்துக்களைப் பரவலாக காட்டும் பாங்குட்ை