பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 123

.யவர். ஒரு விருத்தத்திலேயே இரண்டு மூன்று குறட் கருத்துக்களை அடக்கிப் பாடியவர். எனவே, திருவள்ளுவர் வழி கொண்ட கம்பர் என்பதே இங்கு காணத்தக்க தாயிற்று. - -

(பார்த்தீரா 1; பார்த்திரா பகுத்தறிவு முனையைக் காட்டத் தொடங்கிக் கம்பராமாயணத்தைக் காட்ட நேர்ந்துவிட்டது என்று கருதவேண்டியதில்லை;பாரதி யாரைப் போற்றப் பாவேந்தர் கையாண்ட முறையின் சார்புப்படி இது. மற்றும் மக்கள் அறிந்தவற்றைக் கூறி அறியாததை அறிவுறுத்தும் திருவள்ளுவர் பாங்கையும் கொண்டதாகும்.)

உப்பக்கம்

ஊழையும் உப்பக்கம் காண்பர்” என்னும் தொடர் கருத்தாழம் கொண்டது; ஊழின் வல்லமைகள் அனைத் தையும் வீழ்த்திக் காட்டும் கருத்தாழம் கொண்டது. “ஊழைத் தொய்வாக்கிக் காட்டவேண்டும் என்பதில் திருவள்ளுவர் மனம் பற்றி இதனை எழுதினார்' என்று கொள்ளவேண்டியுள்ளது. இதிலுள்ள மூன்று சொற்களும் திருவள்ளுவரின் உள் உணர்வைக் காட்டுகின்றன. -

“ஊழை உப்பக்கம் காண்பர்' என்றில்லை. ஊழையும்,

என்றொரு உம்மை வைத்தார். இதை இலக்கணம் “உயர்வு சிறப்பு உம்மை’ என்னும் ஊழ் அதிகாரத்தில் கூறப்பட்ட அத்துணைச் சிறப்புக்களையும் நினைவுபடுத்து கிறது, இந்த உம்மை. அங்குக் கண்ட ஊழைவிடப் பெரும் வலிமையுடையது வேறு ஒன்றும் இல்லை, - 'ஊழிற்பெருவலி யாவுள' - என்பதையும் இங்கு கொணர்ந்து நிறுத்துகிறது. மற்று ஒன்று சூழினும் தான் முந்துறும்’ என்ற ஊழின் முன்னேறும் வல்லமையையும் நம் முன் வைக்கிறது இந்த உம்மை.