பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன், - 125

என்னும் பொருளுக்கொப்ப) புறம் போயிற்று' என்று கண்டோம். புறம்போகும் செயலை எத்துணை வல்லமைச் செயல்களுக்குப் பின்னர் அந்த அம்பு செய்தது? மார்பின் உள்ளே புகுந்தது. புகுந்து தங்கிவிடவில்லை; ஒடியது: தோள் வலிமையை உள்ளேயே தின்றது. தின்று உயிரைப் பருகியது. இத்துணையும் செய்துவிட்டுத்தான் புறம் போயிற்று. இராவணன் உடலுக்குள்ளே இத்துணையும் செய்ததாகக் கம்பர் எழுதிய விளக்கச் சொற்களையெல் லாம் அடக்கியது போன்று ஒரே சொல்லாக உப்பக்கம்: என்றார் சுருங்கச்சொல்லும் குறளாசிரியர். -

அம்பின் இத்துணை வல்லமைகளையும் இங்கு ஆள்வினை செய்தது எனக் கொள்ளுமாறு. 'உப்பக்கம்' என்னும் சொல் அமைந்துள்ளது. -

ஆள்வினை ஊழை எதிர்க்கும்;

முந்துறும் ஊழை எதிர்க்கும்;

எதிர்த்து அதன் மைய இடமாம் உள்ளேபுகும்; புகுந்து உள் வல்லமையைப் பிளக்கும்; அதன் உயிரோட்ட மைய மான தெயவத்திறனைப் பருகும்; பருகி வீழ்த்திப் புறங் காணும்; புறங்கண்டு வெற்றிகண்ட வீறுடன் வீழ்ந்து கிடக்கும் ஊழைக் கண்டவாறு தலைதுாக்கி நிற்கும். இதனைக் (உப்பக்கம்) காண்பர்” என்னும் சொல் சொல்கின்றது.

திருவள்ளுவர் ஆழ்ந்த நினைவுடன் உப்பக்கம் என்னும் சொல்லைப் பெய்து ஊழைச் சாடியுள்ளார்; ஆள்வினையைப் பாடியுள்ளார். - -

1. நல்க வேள்வியார் : திரு. மாலை.