பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முன்ை

'உப்பக்கம் காண்பர்' என்றதால் ஊழ் என்னும் ஆன்மிக விதி உயிரற்று, உடல் குலைந்து சிதறித் தகர்ந்து போயிற்று. அதற்குத் தாம் எழுதிய வல்லமைகளை எல்லாம் உப்பக்கம் காண்பர்’ என்றதால் தகர்த்து விட்டார். இவ்வாறு ஆள்வினையின் வல்லமையையும். சிறப்பையும் உயர்த்துவதற்குத்தான் ஊழை அடுக்கடுக் காகச் சிறப்பித்தார் என்பதைக் காண்கின்றோம்.

ஆள்வினை அதிகாரத்தின் முடிந்த முடிவுக் கருத்தாக இக்குறளைத் திருவள்ளுவர் அமைத்தார். இந்த அமைப் புடன் ஊழ் அதிகார இறுதியாம் முடிந்த முடிவை அமைக்கும்போதும் - மற்றொன்று சூழினும் தான் முந்துறும்’ என்று அமைக்கும்போதும் அவர் கொண்ட உள்ளுணர்வின் அடையாளத்தைத் காண முடிகிறது. அது ஊழின் வல்லமை முத்திரை என்று முன் காட்டப்பட்டது. அந்த முத்திரையில் ஒரு பொடி வைத்தார் திருவள்ளுவர். அந்தப் பொடியை முந்துறும் என்னும் சொல் காட்டு கின்றது. இச்சொல்லிற்கு முற்பட்டு நிற்கும் - முன்னே வந்து நிற்கும் - முந்துற்று நிற்கும்” என்றே உரை யாசிரியர்கள் பொருள் எழுதினர்.

எனவே 'மற்று ஒன்று சூழ்ந்து எதிர்த்தாலும் ஊழ் மீண்டும் எதிர்த்து முன்னே நிற்கும் - முந்தி வந்து நிற்கும், நிற்கும் என்றாரேயன்றி வெற்றிகொள்ளும் - வென்று விடும் என்று எழுதவில்லை. ஊழ் வென்று விடும்’ என்னும் கருத்து திருவள்ளுவர்க்குத் தோன்றியிருந்தால்,

'தான்முந்துறும்' என்று எழுதாமல் ... " "தான்வென் றிடும் என்று எழுதி பகுத்தறிவு யிருப்பார். இதனால் குறள் இலக்கணமும் முனை கெடாது. அத்துடன் வென்றுவிடல்'[1581 - 'வென்றிடினும் 1931) என்னும் சொல் 1 5 லாட்சிகள் அவர் எழுத்தில் காணப் படுகின்றன. - -