பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 12?

எனவே, இவ்வகையிலும் ஒரு பொடியாக - ஒரு குறிப், பாக முன்னரே ஊழிற்கு தொய்வைத் திருவள்ளுவர் முன்னறிவிப்பாசுக் குறித்துள்ளமை அறியவேண்டியதாகும்.

அனைத்து நூல்களும், ஊழின் வல்லமைகளையே’ பேசின. ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்' என்பதே சிலப்பதிகாரத்தில் ஒரு குறிக்கோளாகச் சொல்லப்பட்டது. திருவள்ளுவப் பெருந்தகைதான் 'உப்பக்கம் காண்பர்' என்னும் ஆள்வினையின் கூர்முனையால் பகுத்தறி முனையை வடித்துள்ளார்.

மேல் உலகம் - கீழ் உலகம்

நாம் வாழும் இந்நிலம் மண்ணுலகம். இதற்கு மேல் வானத்தில் விண்ணுலகம் உள்ளது என்றும், கீழே கீழ் உலகம் உள்ளது என்றும் ஒரு கற்பனை எழுந்தது. அதற். கேற்பக் கதைகளும், நிகழ்ச்சிகளும் படைக்கப்பட்டன. விண்ணுலகம் சென்றால் வீடுபேற்றை - மோட்சத்தை அடையலாம். கீழுலகம் சென்றால் நிரயத்தை-நரகத்தை அடையலாம் இவ்வாறு நான்மறை, மனு முதலிய வடி நூல்கள் விரித்து விரித்து எழுதியுள்ளன. இக்கருத்துக்கள் தமிழ் மண்ணிலும் பையப் பையப் பரவலாக ஊன்றப் பட்டன. காலப்போக்கில் உறுதியாகவும் பதியப்பட்டன.

திருவள்ளுவர் காலச் சூழலில் இக்கருத்துக்கள் நிலவின. அவற்றைத் திருவள்ளுவரும் தம் நூலில் வைத்தா 'மேலுலகம்' (222); புத்தேள் உலகம்' (58, 113, 234 2901 அவ்வுலகம்' (247); வானோர்க்கு உயர்ந்த உலகம் (346) எனவும், இருள் சேர்ந்த இன்னா உலகம்' (243) என்றும் திருக்குறளில் உள்ளன.