பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

ஒப்புரவும் தேவர் உலகமும்

இவற்றைக் கூறித் திருவள்ளுவர் சில கருத்துக்களை

வலியுறுத்தியுள்ளார். அவற்றள் சில இடங்களில் புத்தேள்

உலகம் சற்றுத் தொய்வுபடுத்தியும் கூறப்பட்டுள்ளது.

‘ஒப்புரவு' என்பது மிக உயர்ந்த பண்பாடு. அதைப் போன்ற நல்லபண்பைக் காணமுடியாது என்று கூறப்புகுந்த திருவள்ளுவர்,

'புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரலின் நல்ல பிற' (213)

என்றார். இங்கு 'ஒப்புரவு' என்னும் நல்ல பண்பைப் புத்தேள் உலகத்தில் காணமுடியாது என்றமை புத்தேள் உலகம் ஒரு நல்ல பண்பைப் பெறாதது என்று தொய்வு படுத்தப்படுகிறது. இது குறிக்கத்தக்க ஒன்று.

மேலுலகம் வேண்டாம்

தமிழர்தம் பண்புகளில் தலைசிறந்தவை காதல், வீரம் ஈகை புகழ். இவற்றுள்ளும் ஈகையும் அதன் வழிப்புகழும்,

'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு' . . . . என்று உயிர்க்கு ஊதியம் எனப்பட்டன. இணையற்ற ஊதியம் என்றார், ஈகை செய்வது அரிய செயல் அன்று; எளிய செயலே என்பதை

'வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை' (221)

என்பதால் கூறினார். ஏழைக்கு அவருக்கு வேண்டிய ஒரு வாய்ச்சோறு:கொடுப்பதும் ஈகையாகும். தமிழன் ஈவான்;