பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் - - 129

ஏற்க மனம் கூசுவான். நம் காலத்துக் கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் அவர்கள் 'தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று பாடத் தொடங்கி அக்குணங்களை அடுக்கினார். அவற்றுள் ஒன்று,

'தானம் வாங்கிடக் கூசிடுவான்: - தருவது மேல் எனப் பேசிடுவான்'

என்பது.

அவ்வையார் ஐயம் இட்டு உண்’’; ஆனால் நீ ஏற்பது இகழ்ச்சி' என்றார் கழைதின்யானையார் என்ற பெயர் பெற்ற சங்கப்புலவர்.

'கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று (உயர்ந்தது)

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று’’’

என்றார். திருவள்ளுவர் தமிழ் மண்ணில் வறுமையில் சிக்கி யவர் மிகுதியாக இருப்பதையும் அவர் இரந்து வாழ்தல் அன்றி வேறு வழியற்றவராக இருப்பதையும் பார்த்து இரத்தவை ஏற்று எழுதினார். ஆனால், அது வேண்டாதது என்தற்கு இரவச்சம்' என்றொரு அதிகாரம் அமைத்தார். இரத்தலின் கொடுமையைப் பாடினார். அவர்நலம் கருதி யும் ஈகையை வலியுறுத்தினார். அவ்வலியுறுத்தலில் முத்திரை போன்ற ஒன்று, -

'கல்லாறு எனினும் கொளல்தது. மேல் உலகம்

இல் எனினும் ஈதலே நன்று” . (222)

1. அவ்வையார் : ஆத்தி : 7, 8 2. கழைதின்யானையார் : புறம் : 204-3, 4