பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 திருவள்ளுவத்ல்ல் பகுத்தறிவு முனை

என்பது. நல் வழியில் வருகிறது என்பதற்காகவும் இரந்து ஏற்கக் கூடாது; அதனைவிட ஈதல்தான் நல்லது. அவ்வாறு ஈவதால் மேல் உலகமே கிடைக்காது என்றாலும் மேல் உலகை வேண்டாம் என்று தள்ளிவிடலாம்; தள்ளிவிட்டு ஈயலாம்.

இக்குறளின் கருத்து ஊன்றிக் காணத்தக்கது. மேல் உலகம் பேரின்பமானது; கிடைத்தற்கு அரியது என்பர். அதனை அடைய நல்லறங்கள் பல செய்யவேண்டும். துறவு நிலை கொண்டு உடலை வருத்தித் தவம் செய்யவேண்டும். அதுதான் இன்பத்தின் முடிந்த முடிவு’ என்பர்.

இவ்வாறு வலியுறுத்தப்படும் மேல் உலகம் கிடைக்காமல் போனால் கவலை பகுத்தறிவு

இல்லை என்று திருவள்ளுவர் எழுதியமை முனை மேல் உலகை ஒதுக்குவதன்றோ, மேல் உலகை ஒதுக்குவதாகச் சொல்லவே கூசுவர்; 1 6

அஞ்சுவர். ஆனால், திருவள்ளுவர் எக்

கூச்சத்தையோ, ஐயத்தையோ, அச்சத்தையோ கொள் ளாது மேல் உலகம் இல் எனினும்; என்று அறிவார்ந்த, வல்லமையுடன் எழுதினார். மேலுலகம் இல்’ என்பதற்கு. 'மேலுலகம் கிடைக்காது என்றும் பொருள். மேல் உலகம் என்று ஒன்றே இல்லை என்றும் குறிப்புப் பொருள்.

இது அறிவார்ந்த கருத்து. முன்னர் மேல் உலகத்தைக் காட்டி அறிவுறுத்தினார். அவை அனைத்தும் உலகத்தோடு ஒட்டிய கருத்தை எடுத்து மொழிந்ததாகும். இக்குறள் அறிவோடு பொருத்தி அறிவுக்கூர்மையுடன் கண்ட பண் பாட்டுப் பகுத்தறிவு முனையாகின்றது. .

வேள்வி

'வேள்வி' என்பது யாகம், யக்ஞம்’ என்னும் வடசொற். களுக்குக் கொள்ளப்பட்ட தமிழ்ச் சொல். யாகம் என்பது