பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் - 13量

யூபம் என்னும் வேள்வித்துரண் நட்டு, தீக்குழியிட்டு, வட மொழி மந்திரம் ஒதிச் செய்யப்படுவது. இது ஆரியர்க்கு மரபுவழி உரியது; வடவரின் வழக்காறு; பார்ப்பனரின் பயன் வயல். அவர்தம் நான்மறைகளில் இரண்டாவதாகிய 'யசூர் மறை, வேள்விக்காகவே செய்யப்பட்டது.

و مشکی -: வடவர்க்கே உரியது

வேள்வியில் வடமொழியே ஒதப்படும். பிறமொழிக் காற்றும் நுழையாது. நூற்றுக்கு நூறு ப்ார்ப்பனரே அமைவர். மற்றவர் பங்கு கொள்ள வழியில்லை. அரச - குலத்தினரும் வணிகரும் செய்விப்பர். பங்குகொள்ள முடி யாது. நாட்டு நலம் கருதி மழைபெய்விக்க இது செய்யப் படும் என்பர். ஆனால் ஒருவரை சாகவைக்கும் நோக்குடன் செய்யப்படுவதும் உண்டு. இவ்வேள்விக்கு வாத்ரு சம்கார யக்ஞனம்’ என்று பெயர்.

கேரளத்து வைக்கத்தில் பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்டோரை கோயிலில் நுழையச் செய் யும் போராட்டம் நடத்தினார். அதனை விரும்பாத பார்ப்பனர் இந்த வேள்வியைச் செய்தனர். பயன் பெரியார் நீண்டகாலம் வாழ்ந்தார்.

வேள்வி தமிழ் மண்ணில் இறக்குமதி செய்யப்பட்டது. குடிமக்கள் இதுபற்றி அறியார். தொடர்பு கொண்ட தில்லை. முற்காலத்தில் மன்னர்களே பார்ப்பனர் வேண்டு கோளால் இதனைச் செய்தனர். இதனைச் செய்து இத. னால் பெயர்பெற்ற மன்னர் இருந்தனர். -

'பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி'

(பாண்டியன்).

'இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி (சோழன்)