பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.

'பல்யானைச் செப்பெழு குட்டுவன்’’ (சேரன்)

முவேந்தரும் குறிக்கத்தக்கவராயினர், மற்றும்பல மன்னரும் செய்தனர்; காணிக்கையும் பயனும் பெற்றோர் பார்ப் பனமே. பாலைக் கெளதமனார் என்னும் பார்ப்பனப் புலவர் மேலே கண்ட சேர மன்னன்மேல் பத்துப் பாடல்கன் பாடினார்.

'பாடிப்பெற்ற பரிசில் (சேரமன்னன்) நீர் வேண்டியது கொண்மின் என, யானும் என் பார்ப்பணியும் சுவர்க்கம் புகல் வேண்டும்; என (மன்னன்) பார்ப் பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்க, பத்தாம் பெருவேள்வியில் பார்ப்பானை யும். பார்ப்பனியையும் காணாராயினார்' என்று பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தின் இறுதியில் உள்ள பதிகம் அறிவிக்கிறது.

இது கொண்டும் வேள்வி பார்ப்பனர்க்குரியது; அவர்தம் பயனுக்கேற்பட்டது, ஏற்பாடுகளும் பெருஞ்செலவும் மன்னனுக்குரியவை என அறியலாம்.

திருவள்ளுவர் காலச் சூழலில் தமிழ் மண்ணில் மன்ன ராலும், செல்வப் பெருமக்களாலும் பார்ப்பனர் வேள்வி பரவலாக உலவி வந்தது. தமிழர் அவ்வேள்வியில் எவ் வகைப் பங்கும் பயனும் பெற முடியாது; அவர் தமிழ் மொழி யும் அண்ட முடியாது.

விருந்து-வேள் வி.

வேள்வி' என்னும் சொல்லும் யாகம் என்பதற்கு

உரிமையுடைய சொல் அன்று. வேள்வி என்னும் சொல் லிற்கு விரும்பிச் செய்யப்படுவது' என்று பொருள்.

1. பாலைக் கெளதமனார்: பதி. பதிகம், 3.