பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘134 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

என்றார் திருவள்ளுவர். இங்கு அவி உணவு என்றது, 'அவிசு அன்று. உடலைக் கொழுப்பால் கொழுக்கவிடாது அவியக் (இளைக்கச்) செய்யும் இயற்கை உணவைக் குறிக்கும். 'அவியுணவின் ஆன்றோர்’ என்பது ஆன்றவிந் தடங்கிய சான்றோரைக் குறிக்கும. -

தமிழ் மண் ணில் வடவர் யாகம்-வேள்வி பெருகியது. பூதயாகத்தில் விலங்குகளை உயிர்ப்பலியாக இடுவர். ஆவினங்களும், ஆடுகளும் சிலபோது மாந்தரும் பலிப் பொருளாயினர். இவ்வாறு உயிர்ப்பலியிடும் செயல் திருவள்ளுவரால் ஏற்றுக்கொள்ளப்படாதது. உணவிற்கு உயிரைக் கொல்லுவதை மறுத்து புலால் மறுத்தல்” கூறியவர் திருவள்ளுவர். கொல்லாமை” என்று அதிகாரம் படைத்தவர்.

'கொல்லாமை அறவி னை’ (321)

என்றார்.

“ஒன்றாக நல்லது கொல்லாமை' (323)

என்றார்.

'தன்னு யிர்போவதாயினும்பிறிதுயிர்கொல்லற்க'(327)

என்றார். - -

வடவரின் யாகத்தில்-வேள்வியில் உயிர்ப்பவி எனக் கொலை கடைப்பிடிக்கப்பட்டதைத் திருவள்ளுவர் தமிழ் மண்ணில் கண்டார். வேள்வியின் பெயரால் அவிசு’ என்று உயிரைக் கொலை செய்தும் நெருப்பிலிடுவதைக் கண்டார்.

'அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் * “ உயிர்செகுத்து உண்ணாமை நன்று' (259) என்று அழுத்தமாக எழுதினார்.