பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 137

குறிகள் சாபக் குறிகளாயின. இதுபோன்ற கொச்சைக் கதைகள் வடமொழியில் நிறைந்துள்ளன. இந்த இழி கதையும் தமிழ் மண்ணில் உலவ விடப்பட்டமை இந்த மண் பெற்ற அவலங்களுள் ஒன்று. -

மாந்தர்க்கு தெரிந்ததும் பரவலாக அறிமுகமாகி யுள்ளதுமாகிய இக்கதையைக் குறிப்பதால் தாம் அறிவிக்க விரும்பிய ஐந்தவித்தான் ஆற்றலைத் தெளிவாக காட்ட முடியும் என்பதே திருவள்ளுவர் நோக்கம். இதனையும், “அடியளந்தான் தாயதெல்லாம்' என்று திருமால் - வாமனன் - மாவலி கதையை எடுத்தாண்டது போன்றே இதனையும் எடுத்து மொழிந்தார் - தெரிந்ததைக் கொண்டு தெரியவைக்க வேண்டியதை எளிதாக்க இதனைக் கையாண்டார் என்று கொள்வதே சாலும்,

பெய்" எனப் பெய்யுமா ?

"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை' (55)

இக்குறளும் பகுத்தறிவு நோக்கில் ஐயத்தை மூட்டுவதா கின்றது. கற்புடையவள் பெய்' என்று சொன்ன அளவில் மழை பெய்துவிடுமா? பெய்யாது. உண்மைதான். இது குறள் கருத்து அன்று. 'பெய் என்று சொன்னால் பெய்யும்’ என்பதற்கு,

'அகர முதல எழுத்தெல்லாம்' என்னும் முதற் குறளைக் காணவேண்டும். முதற் குறள் உவமை அமைந்த குறள், 'அகர முதல எழுத்தெல்லாம் போல ஆதிபகவன் முதற்றே உலகு' என்று பொருள் காண்போம். இதில் போல’ என்னும் உவம உருபு குறளில் மறைந்து வருவதால் "எடுத்துக்காட்டு £2.6l! 6ð) LÚ அணி' கையாளப்பட்ட குறளாகும். -

தி.ப-9.