பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 139

ஆனால், இப்படி ஒரு கருத்து தமிழ் இலக்கியங்களிலும் புகுந்திருந்தது. ஒரு பெண் ஒருவன் அணைத்ததால் அவ னுக்கு உரியவள் ஆகி, மனைவியாகி, கற்புடிையவளாக ஆனாள்; அவளை, -

'பெருமழை தரல்வேண்டின் தருகிற்கும்

பெருமையளே’ -

என்று கலித்தொகை பாடிற்று. திருவள்ளுவரோ பகுத்தறி விற்கு ஒத்துவரும் பாங்கில் உவமையாக இக்குறளை அமைத்தார். எனவே, இதனால் இக்குறள் பகுத்தறிவு முனை கொண்டதாகிறது. முன்னர் எழுந்த ஐயமும்

கலைகிறது.

ւորաւ, விழுங்கிய மதி

வானத்தில் கோள் மறைவு’ எனப்படும் கிரகணம்' ஏற்படுவதை அறிவோம். இது எவ்வாறு ஏற்படுகிறது? ஞாயிற்றின் ஒளித்தடையால் நேரும் நிழலால் ஏற்படுகிறது. பூவுலகம் தன்னைச் சுற்றும் திங்களுடன் ஞாயிற்றைச் சுற்றுகிறது. இச்சுற்றலில் பூவுலகு நடுவில் அமைய இருபக்கமும் ஞாயிறும் திங்களும் நேர்கோட்டில் அமைவது உண்டு. இந்த அமைப்பில் திங்கள் ஞாயிற்றின் ஒளி நடுவில் உள்ள பூவுலகின் நிழலில் புகுந்து ஒளி குறைந்து முழு நிலவில் இருண்டு, வெளி வரும்போது ஒளி பெறுவ "திங்கள் மறைவு-சந்திர கிரகணம் எனப்படும். -

இதனை மேலை நாட்டு வானவியல் அறிஞர் கண்டறிந் தனர். -

ஆனால், இந்தியரில் வடபுலத்தார் கிரகணத்திற்கு வேறு காரணம் கூறினர். இராகு, கேது என்னும் பாம்புகள்

1. கபிலர் : 6: 39 – 6