பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

முறையே ஞாயிற்றையும் திங்களையும் விழுங்குகின்றன: அவை மறைகின்றன. பின் கக்குகின்றன; அவை வெளி: வந்து ஒளிர்கின்றன என்றனர். எதற்கும் கதை படைக்கும் வடவர் இதற்கும் ஒரு கதை கட்டினர். கதை ஒரு புறம் இருக்க, பாம்புகள் விழுங்கும் கருத்து தமிழ் மண்ணிலும் நிலவியது. திருக்குறளிலும் இதனைக் காண்கின்றோம்.

ஒரு வள்ளுவக் காதலி பேசுகிறாள் :

‘நான் என் காதலனைக் கண்டது ஒருநாள் தான், அது வெளியார்க்குத் தெரிந்து அலராகப் பரவி விட்டது. வானத்துத் திங்களைப் பாம்பு கவ்வுவது பலருக்கும் தெரிவது போன்று பலருக்கும் எங்கள் காதல் தெரிந்துவிட்டது”

என்று தோழியிடம் கூறினாள். இதனைத் திருவள்ளுவர்,

'கண்டது மன்னும் ஒருநாள்: அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று” (1146),

என்றார்.

திங்கள் என்னும் ஒரு கோளை ஒரு பாம்பு வானத்தில் கவ்வுமா? இது பகுத்தறிவிற்குப் பொருந்துமா? இவ்வாறு: ஐய வினாவை எழுப்பக்கூடியது தான் இக்குறள். உண்மையை அறிய விளக்கமாகக் காண வேண்டியுள்ளது.

வானவியல் அமைவு

ஆசிரியர் நல்லந்துவனார் பரிபாடலில் ஒரு வானவியல் கருத்தை வைத்துள்ளார். வையை ஆற்றில் வெள்ளம் பெருக மழை பொழிந்ததைக் கூறப் புகுந்த அவர் பெரு. மழைக்குரிய காரணத்தை விளக்கினார். சில கோள்களின் இயக்கம் விண்மீன்களின் அமைவு முதலியவற்றைக் கூறும்