பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 141

அவர் இராகு, கேது என்னும் துணைக்கோள்களின் இயக்கப் பாதையில் திங்கள் செல்லும்போது திங்கள் ஒளிமறைய இருளடைகிறது என்பதை,

'பாம்பு (கேது) ஒல்லை

மதியம் மறைய வருநாளில்

  • * *

என்று பாடினார்.

'பாம்பு ஊர்மதி' என்றார் நற்சேந்தனார்.

பாலை பாடிய பெருங்கடுங்கோவும் பாம்பு சேர் மதி: என்று பாடினார்.

இஃதொரு வானவியல் கருத்து. இதன் பகுத்தறிவு தொடர்பில் கேது ஏன் பாம்பு எனப்பட்டது முனை என்பதை அறிய வேண்டும்.

இராகு, கேது என்பவற்றைத் தமிழ் 19 நிகண்டுகள் முறையே கரும்பாம்பு, செம் பாம்பு என்று தமிழ்ப் பெயரில் குறிக்கின்றன. இவற்றின் வடிவம் சற்று நீள் வட்ட வடிவத்தில் முன்தலைப்பகுதி அகன்று பின் வால்பகுதி கூர்த்து இருப்பதை வைத்துப் பட மெடுத்த பாம்பாக இவை உருவகம் செய்யப்பட்டன.

விண்மீன்களின் அமைப்பிற்கும், கோள்களின் அமைப் பிற்கும் உவமைப் பெயர்களைத் தமிழ் வானவியலார் சூட்டி னர். நிகண்டுகள்

1. நல்லந்துவனார் : Luff) : 11–9, 10 2. பாலை பாடிய

பெருங்கடுங்கோ : கலி : 15.17 3. நற்சேந்தனார் . நற் : 123-2