பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 145

இரங்கத்தக்கதைச் செய்தாகிவிட்டது. அதனால் என்ன நேரும்(?) அதற்கு இப்போது என்ன செய்வது (?) எனக் கலங்க நேரும்.

இந்நிலையில், செ ய் த வ னு க் கு ஆன்மிகத்தாராக இருந்தால் என்ன சொல் பகுத்தறிவு வர். தீமை செய்துவிட்டாய்: அது முனை தீவினை. அது உன்னை நிரயத்தில் செலுத்தும்; தீமையை அடைவாய். 2O. வேண்டுமானால் கழுவாயாக இன்ன இன்ன செய்யலாம்' என்று சாத்திரச் சடங்குகளைக் கூறுவர்; செய்தவன் அஞ்சுவான்; கலங்குவான்.

திருவள்ளுவர் அவ்வாறெல்லாம் சொல்லவில்லை.

செய்வானேல் மற்றுஅன்ன செய்யாமை கன்று' fé55]

என்றார்.

செய்துவிட்டானா மீண்டும் அவை போன்றவற்றை இனிச் செய்யாதே; அஃதே நல்லது என்றமை செய்தவனைத் தேற்றும்; மீண்டும் செய்யாமல் திருத்தும். மிக எளிமையான அறிவுரை. எளிமையுடன் பகுத்தறி வையும் இணைத்துக்கொண்டு வழிகாட்டுதலாகிறது. இஃதும் ஒரு பகுத்தறிவு முனை.