பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடக்கிவருகின்றனர். பகுத்தறிவிற்கு மாறான கருத்துக் களுக்கும் திருக்குறள் சான்றாகக் கூறப்படுவது ஒரு பெரும் அவலம். இந்த அவலம் தலையிழுத்துக்கொள்வதற்கு இந் நூல் ஒரளவேனும் உதவும்.

திருவள்ளுவரின் காலச்சூழல், அச்சூழலால் தமிழ்மாந்தர் உணர்வும் அறிவும், திருவள்ளுவரின் நோக்கு, சூழலுக்கேற்ற திருவள்ளுவர் அணுகுமுறை என்பனவற்றை முன்னோட்ட விளக்கமாக இந்நூல் கொண்டுள்ளது.

பகுத்தறிவுப் பெரியார் ஈ. வே. இரா. அவர்களின் வழியில்

'கடவுள் மறுப்புக் கொள்கை

சாதி ஒழிப்புக் கொள்கை மூட ஒழிப்புக் கொள்கை'

எனும் இவை பகுத்தறிவுப் பாங்குகளாகக் கொள்ளப்பெற்று இவற்றில் திருவள்ளுவப் பகுத்தறிவு முனைகள் ஆய்ந்து விளங்கப்பெற்றுள்ளன. முழுமையும் தொடர்களுமாக 145 குறட்பாக்கள் மேற்கொள்ளப்பெற்றுள்ளன. இவற்றுள் நேர்முகச் சான்றுகளும் அணுக்கச்சான்றுகளும் அடங்கும்.

இந்நூல் பதிப்பாவதில் ஆர்வங்கொண்ட பொறியாளர் திரு. பி. அருண் அவர்கள் மனம்பற்றி நூற்பதிப்பிற்குரிய தாள் செலவை ஏற்று மகிழ்வித்தார்கள். என் இளவல் போன்று அன்பைப் பெய்பவர். பண்புள்ளமும், பழகுதற். கினிய பாங்கும் நிறைந்தவர். உணர்வால் தமிழர். ஆர்வத்தால் குறளன்பர். இவரை என் நெஞ்சத்துள் அமர்த்தி வாழ்வு நலம் பொலிக' என்று வாழ்த்துகின்றேன். பாராட்டி நன்றி கூறுகின்றேன்.